சந்திரபாபு நாயுடுவுக்கு இந்தியா கூட்டணி அழைப்பு
ஆந்திராவில் ஆட்சியமைக்கவுள்ள சந்திரபாபு நாயுடுவுக்கு இந்தியா கூட்டணி அழைப்பு விடுத்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் தற்போதைய நிலவரப்படி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 233 இடங்களில் முன்னிலையில் உள்ளது. மற்றவை 17 இடங்கள் முன்னிலை வகிக்கின்றன.
இந்நிலையில் மத்தியில் ஆட்சி அமைக்க 272 இடங்களில் வெற்றி பெறுவது அவசியம். பாஜக கூட்டணி 293 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. எனினும், தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள சில கட்சிகளை தங்கள் பக்கம் இழுக்க ‘இந்தியா கூட்டணி’யில் உள்ள தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்துவதாக சொல்லப்படுகிறது.
https://www.apcnewstamil.com/news/politics/chandrababu-naidu-wins-jagan-mohan-resigns/89897
அதனை தொடர்ந்து ஆந்திராவில் ஆட்சியமைக்கவுள்ள சந்திரபாபு நாயுடுவுக்கு இந்தியா கூட்டணி சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தியா கூட்டணிக்கு ஆதரவு அளித்தால் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என உறுதி அளித்துள்ளனர்.
மக்களவை தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி 16 தொகுதியில் முன்னிலையில் உள்ளது.