Homeசெய்திகள்அரசியல்இந்தியா கூட்டணியில் பெரும் குழப்பம்... ராகுலை விட செல்வாக்கு மிக்கவரா மம்தா..? நகைக்கும் பாஜக

இந்தியா கூட்டணியில் பெரும் குழப்பம்… ராகுலை விட செல்வாக்கு மிக்கவரா மம்தா..? நகைக்கும் பாஜக

-

இந்திய ஜனநாயகத்தில் அரசியல் கட்சிகளின் கூட்டணி தலைவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு உறுதியான, வெளிப்படையான வழிகள் தெரியவில்லை. ஏறக்குறைய அனைத்து கட்சிகளிடையேயும் ‘தான்’ என்கிற அகங்காரம் ஆட்டிப்படைத்து வருகிறது. வம்ச மரபும் அதில் கலந்து விட்டது. எதிர்க்கட்சிக் கூட்டணியான ‘இந்தியா’ கூட்டணி தலைமைப் பதவி தொடர்பாக எழுந்துள்ள சிக்கல்களே இதற்கு சமீபத்திய உதாரணம்.

பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்து போட்டியிடும் தேசிய முகம் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. மக்களவை தேர்தல் முடிவுகளை, பாஜக அரசின் மீதான நம்பிக்கையில்லா அடையாளமாக ‘இந்தியா’ கூட்டணி முன்வைக்க முயற்சிக்கிறது. ஆனால் இரு கூட்டணிகளின் முக்கிய கட்சிகளின் வாக்குகளில் பெரிய வித்தியாசம் இருந்தது. இதை அலட்சியப்படுத்த முடியவில்லை. மோடிக்கு சவால் விடும் வலிமையான முகத்தை இந்தியா கூட்டணியால் முன்வைக்க முடியவில்லை என்று சாமானிய மக்கள் கருதுகின்றனர்.

மல்லிகார்ஜுன் கார்கேவாக இருந்தாலும் சரி, ராகுல் காந்தியாக இருந்தாலும் சரி, இந்த கூட்டணியின் தலைமைக்கு யாரும் பொருத்தமானவர்கள் என்று கருதப்படவில்லை. ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸின் தோல்வியும், மகாராஷ்டிராவில் மகா விகாஸ் அகாதியின் (எம்.வி.ஏ) படு மோசமான தோல்வியும் எதிர்க்கட்சிக் கூட்டணியின் தலைமை யார் என்பதை மேலும் நெருக்கடியை அதிகரித்துள்ளது.ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது சாத்தியப்படாது – இது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் – எதிர் கட்சிகள் கடும் எதிர்ப்பு

இந்த இரண்டு மாநிலங்களிலும் ‘இந்தியா’ கூட்டணியின் செயல்பாடு நாடாளுமன்றத் தேர்தலில் சிறப்பாக இருந்தது. ஆனால், இந்த இரு மாநிலங்களின் வெற்றியால் மக்களின் நாட்டம் மீண்டும் பாஜக பக்கம் திரும்பியுள்ளது என்ற முடிவுக்கு வர முடியாது. காரணம் ஜம்மு காஷ்மீரில் உமர் அப்துல்லாவும், ஜார்க்கண்டில் ஹேமந்த் சோரனும் வெற்றி பெற்றனர். இருவரும் ‘இந்தியா’ கூட்டணியின் முக்கிய தலைவர்கள். ஆனால் அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸின் செயல்பாடு ஏமாற்றம் அளிக்கிறது. அதனால்தான் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை ‘இந்தியா’ கூடணி தலைவராக்க சில பிராந்திய கட்சிகள் கோரிக்கை வைத்தன. இது, ராகுல் காந்தி மீது கொண்ட நம்பிக்கை தவறானது என்பதற்கான சமிக்ஞை.

மம்தா தனது மாநிலத்தை தாண்டி செல்வாக்கற்றவர். பிற மாநில மக்களை ஈர்க்கும் தலைவரும் அல்ல. கடந்த 13 ஆண்டுகளில் கொல்கத்தாவில் அவரது ஆட்சி பெரும் எழுச்ச்சி எதையும் ஏற்படுத்தவில்லை. மோடி முதல்வராக இருந்த காலத்தை பயன்படுத்தி திறமையான நிர்வாகியாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். மம்தாவின் நீண்ட பதவிக்காலத்தால் வங்காளத்தின் பொருளாதார நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. முஸ்லீம் ஆதரவும், ஆதிக்க தந்திரமும்தான் அவரது அற்புதமான தேர்தல் வெற்றிக்கு காரணம். துரதிர்ஷ்டவசமாக, இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் இந்த ஃபார்முலா வேலை செய்யாமல் போகலாம்.

திரிணாமுல் காங்கிரசின் செல்வாக்கு வங்காளத்தை தாண்டி இல்லவேயில்லை. மற்ற மாநில கட்சிகளின் தலைவர்களுக்கு மம்தா தலைவராவதில் பெரிய விருப்பம் இல்லை. தேசிய அளவில் மம்தா உரிமை கோருவதால் காங்கிரசுக்கு தனிப்பட்ட முறையில் இழப்பே… ஏற்கெனவே தேசிய அளவில் வலுவான இருப்பைக் கொண்டிருந்த கட்சி. மம்தாவை மற்ற மாநில கட்சிகளால் பெயரளவிலாவது ஏற்றுக் கொள்வார்களா எனப்து சந்தேகமே. வெவ்வேறு சித்தாந்தங்களைக் கொண்ட கூட்டணியில் உருவாகும் வேறுபாடுகளைக் கையாள்வதில் அதன் தலைவர் திறமையானவராக இருக்க வேண்டும் என்று ‘இந்தியா’ கூட்டணி கருதினால், மம்தாவை தலைவராக்கலாம். ஆனால், மோடியின் கவர்ச்சிக்கு போட்டியாக யாரையும் முன்னிறுத்த முடியாததுதான் அதன் குறை என்று எதிர்க்கட்சிகள் கருதினால், மம்தா தன்னை நிரூபிக்க பல தேர்தல்களை, பல ஆண்டுகளை கடக்க வேண்டி இருக்கும்.

எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பயன்படுத்திக் கொண்டு மோடிக்கு இயற்கையான மாற்றாக உருவெடுக்க ராகுல் காந்திக்கு நல்ல வாய்ப்பு கிடைத்தது. துரதிர்ஷ்டவசமாக, காங்கிரஸுக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும், அவரை ஒரு சிந்தனைமிக்க, இளம் தலைவராக முன்னிறுத்துவதற்கு தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் இது நடக்கவில்லை. ராகுலின் அதீத முந்திரிக்கொட்டைத் தனமும் ஒரு காரணமாக இருக்கலாம். வெறுமனே குற்றம் சொல்லிக்கொண்டே இருந்தால் மோடியை வீழ்த்தலாம் என்பது மட்டுமே ராகுலின் கணக்கீடாக இருக்கிறது.

"பீகார் கூட்டம் வரலாற்றை மாற்றி எழுதும்"- முதலமைச்சர் மம்தா பானர்ஜி பேட்டி!
Photo: ANI

2014 தேர்தலுக்கு முன்பு அவர் அளித்த ஒரு பேட்டியில் இருந்து அவர் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில்கள் அனைத்தும் பெண்கள் அதிகாரம் பெறுவதைச் சுற்றிச் சுற்றி வந்தது. ராஜீவ் காந்தியும் மிக விரைவாக காங்கிரஸ் கட்சியில் செல்வாக்கு பெற்றதாக, பதவி கொடுக்கப்பட்டதாக அப்போது குற்றம் சாட்டப்பட்டது.
இப்போது அதேபோன்று வாரிசு அரசியல் என ராகுலுக்கும் தடையாக இருக்கிறது. ‘இந்தியா’ கூட்டணியின் சில மாநிலங்களில் உள்ள கட்சிகள் பெரும் முன்னெடுப்போடு, உழைப்போடு வெற்றி பெற்றும், தங்களின் தேசிய லட்சியங்களுக்கு காங்கிரஸ் தடையாக இருப்பதாகவே உணர்ந்து வருகின்றன என்பதை முக்கியமாக கருத்தில் கொள்ள வேண்டும்.

MUST READ