Homeசெய்திகள்அரசியல்தவெகவில் இணைகிறாரா..? வெகுண்டெழுந்த காளியம்மாள்… கதறும் நாதக தம்பிகள்..!

தவெகவில் இணைகிறாரா..? வெகுண்டெழுந்த காளியம்மாள்… கதறும் நாதக தம்பிகள்..!

-

- Advertisement -

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனாதமிழக வெற்றிக் கழகத்தலைவர் விஜய் முன்னிலையில் விசிகவில் இருந்து விலகிய ஆதவ் அர்ஜூனா மற்றும் அதிமுகவில் இருந்து விலகிய சி.டி.ஆர்.நிர்மல் குமார் உள்ளிட்டோர் இணைந்து உள்ளனர். ஆதவ் அர்ஜூனாவுக்கு, தேர்தல் சிறப்பு பிரிவு பொதுச்செயலாளர் என்ற உயரிய பொறுப்பு வழங்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. தலைவர், பொதுச்செயலாளருக்கு அடுத்தபடியாக இந்த பொறுப்பு மிகவும் சக்தி வாய்ந்த பொறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் வியூகங்களை வகுத்தல், பொதுக்கூட்டங்களை நடத்துதல், தவெக கட்சி தொடர்பான ஊடக செயல்பாடுகள், வேட்பாளர்களின் பலம் மற்றும் பலவீனங்களை கண்டறிதல், தவெகவுக்கு சாதகம், பாதகமான தொகுதிகளின் விவரங்களை சேகரித்தல் உள்ளிட்ட பணிகளை ஆதவ் அர்ஜூனா மேற்கொள்ள வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

அதிமுக ஐடி பிரிவு இணைச் செயலாளராக உள்ள நிர்மல்குமாருக்கும், ராஜ் சத்யனுடன் சிக்கல் நீடிப்பதாக சொல்லப்பட்டு வந்தது. ஐ.டி.விங்கில் இருந்த கோவை சத்யன் சமீபத்தில் ஐ.டி விங்கில் இருந்து சிறிது காலம் விலகியிருப்பதாக அறிவிப்பு வெளியிட்டிருந்தார். ராஜ் சத்யனுடன் நடந்த மோதல் நீடித்தது. எஸ்.பி.வேலுமணியின் ஆதரவாளரான நிர்மல்குமாருக்கு கட்சியில் சரியான மதிப்பு கொடுக்காமல் எடப்பாடி பழனிசாமி அவரை கட்டம் கட்டி வைக்கப்பட்டதாக சொல்லப்பட்டது. ஆனாலும் நிர்மல் குமார் அதிமுகவில் இருந்து விலகியது அதிமுக-வுக்குப் பின்னடைவாகவே பார்க்கப்பட்கிறது. ஆனால், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களோ, இதை முன்கூட்டியே எதிர்பார்த்தே அவரை ஒதுக்கி வைத்ததாகச் சொல்கிறார்கள்.

ஒருவழியாக விஜய் முன்னிலையில் கட்சியில் இணைந்த நிர்மல் குமார் தமிழக பாஜகவில் ஐடி பிரிவு தலைவராக இருந்த அவருக்கு தவெகவில் அதே அதே பதவி கொடுக்கப்படும் என்று தெரிகிறது. கடந்த 2023ம் ஆண்டு பாஜக ஐடி பிரிவில் இருந்த நிர்மல் குமாருக்கும், அண்ணாமலைக்கும் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து விலகி அதிமுக-வில் இணைந்தார். பிறகு அதிமுகவில் இணைந்தார்.

அதிக மனித உயிர்களை காவு வாங்கிய 2024 - தமிழகத்தை உலுக்கிய ஆம்ஸ்டராங் படுகொலை – விஷசாராயத்தால் உயிரிழந்த 67 பேர்

இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் முக்கிய பேச்சாளர்களில் ஒருவரான காளியம்மாளும் இன்றைய தினம் விஜயை சந்தித்து தவெகவில் இணைத்துக் கொள்வார் என்ற தகவல் வெளியானது. கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வட சென்னை தொகுதியில் போட்டியிட்டதன் மூலம் பிரபலம் ஆனவர் காளியம்மாள். அதன் பின்னர் நாம் தமிழர் கட்சி பிரதிநிதியாக ஊடக விவாதங்களில் கலந்து கொண்டு பொதுமக்களின் கவனிப்பை பெற்று வந்தார். இந்த நிலையில் காளியம்மாளை ‘பிசிறு’ என்று விமர்சித்து பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானின் ஆடியோ சமூகவலைத்தளங்களில் வைரல் ஆகி சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. காளியம்மாள் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி விரைவில் வேறு கட்சியில் இணைவார் என பேசப்பட்டது. ஆனால் சீமான் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் காளியம்மாளும் பங்கேற்று ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இந்நிலையில் ஆதவ் அர்ஜூனா, சி.டி.ஆர்.நிர்மல் குமார் ஆகியோருடன் காளியம்மாளும் விஜயின் தலைமையை ஏற்று தவெகவில் இணைவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் தான் தவெகவில் இணைவது குறித்து வெளியான செய்திகளுக்கு காளியம்மாள் மறுப்பு தெரிவித்து உள்ளார்.”எந்த அனுமானத்தின் அடிப்படையில் அவை கூறப்படுகிறது? தற்போது உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறேன். ஏதாவது தகவல் இருந்தால் கூறுகிறேன். உங்களுடைய கற்பனைகளுக்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டாம் என கடந்து போனால், விதவிதமாக கதை எழுதிக் கொண்டே இருக்கிறீர்கள். சமூக ஊடகமான வலையொலிகளில் கதை சொன்னது போக பத்திரிகைகளும் எழுதத் தொடங்கி விட்டது..” எனக் கூறி காளியம்மாள் தவெகவில் இணைவதாக வந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.

இந்நிலையில் ”நாம் தமிழர் கட்சியில் இருந்து காளியம்மாள் விலகினால்… உண்மையில் நாம் தமிழர் உறவுகளுக்கு பெரிய இழப்பே… உடனே இதனை சரிசெய்ய முயற்சி செய்யுங்கள்” என சீமானுக்கு அறிவுறித்தி வருகின்றனர் நாதக தம்பிகள்.

MUST READ