Homeசெய்திகள்அரசியல்மூத்த தலைவருக்கு இது அழகா ? - கார்த்தி சிதம்பரம்

மூத்த தலைவருக்கு இது அழகா ? – கார்த்தி சிதம்பரம்

-

மூத்த தலைவருக்கு இது அழகா? - கார்த்தி சிதம்பரம்

மூத்த தலைவருக்கு இது அழகா ? அவரை விமர்சனம் செய்ய நான் தயாராக இல்லை – கார்த்தி சிதம்பரம்

திமுகவை பற்றி பேசியதற்காக கட்சியில் இருந்து தன்னை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுவது ஆச்சரியமாக இருப்பதாக கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
ஒரு வாரத்திற்கு முன்பு காங்கிரஸ் தலைவரை மேடையில் வைத்துக் கொண்டு தான்தெரிவித்த கருத்துக்காக ஈவிகேஎஸ் இளங்கோவன் தன்னை விமர்சிப்பது தேவையில்லாதது எனக் கூறியுள்ளார்.

“காங்கிரஸ் கட்சி வளர வேண்டும் என நான் சொன்னதை நாட்டுக்குக் கேடு என்று கூறுகிறார் ஈவிகேஎஸ்.இளங்கோவன்” என்று கார்த்தி சிதம்பரம் ,சிவகங்கை காங்கிரஸ் எம்.பி தெரிவித்துள்ளார்.

அண்மையில் புதுக்கோட்டையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கார்த்தி சிதம்பரம், காங்கிரஸ் எம்பி “கூட்டணியில் இருக்கிறோம் என்பதற்காக திமுகவிடன் கூனிக் குறுகி நிற்க வேண்டியதில்லை” என பேசி இருந்தார்.

இதற்கு தனியார் தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் பதிலளித்த காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் எம்எல்ஏ, , “திமுகவினர் வேலை செய்திருக்காவிட்டால் சிவகங்கை தொகுதியில் கார்த்தி சிதம்பரத்துக்கு டெபாசிட் தொகை கிடைத்திருக்குமா? என்பதுகூட சந்தேகம்தான்” என விமர்சனம் செய்திருந்தார்.

ஈவிகேஎஸ்.இளங்கோவனின் பேட்டி காங்கிரஸ் கட்சிக்குள் கலவரத்தை உண்டாக்கியுள்ளது. இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய கார்த்தி சிதம்பரம், “ஜூலை 19-ம் தேதி புதுக்கோட்டையிலும், ஜூலை 20-ம் தேதி சிவகங்கையிலும் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசியபோது மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட தலைவர்கள் மேடையில் இருந்தனர். அப்போது பேசியதற்கு ஜூலை 26-ம் தேதி ஈவிகேஎஸ். இளங்கோவன் பேட்டி அளித்துள்ளது வியப்பாக இருக்கிறது.

குத்தகை முறையில் ஓட்டுநர்களும், நடத்துநர்களும் நியமிக்கப்படுவது சமூகநீதிக்கு எதிரானதாகும் – ராமதாஸ்

அதில் நான் என்ன பேசினேன் என்பதை அவர் கேட்டாரா? என்பதே சந்தேகமாக இருக்கிறது. அவர் மூத்த தலைவர். கட்சி வளர வேண்டும் என நான் கூறியதை நாட்டுக்குக் கேடு என்று சொல்கிறார். அவரை விமர்சனம் செய்ய நான் தயாராக இல்லை. நான் பேசியது சரியா? தவறா? என்பதை கட்சி தொண்டர்களிடம் கேளுங்கள். மேடையில் இருந்த கட்சி தலைவர்களுக்கும் தெரியும். நான் கூட்டணி வேண்டாம் என்று பேசவில்லை. கூட்டணியால் தான் வெற்றி பெற்றேன் என்று தான் பேசினேன்” என்று தெரிவித்தார்.

MUST READ