நிதி மற்றும் நாட்டு முன்னேற்றம் குறித்து எப்போதும் பூரண நம்பிக்கையுடன் இருக்கிறேன். நிர்மலா சீதாராமன் அவர்கள் எடுத்துவரும் திட்டங்களின் மூலம் நம் நாட்டின் பொருளாதாரம் அதிகரித்து வருவது ஒரு உண்மை. விவசாயம், பாதுகாப்பு, சுகாதாரம், மற்றும் அடிப்படை வசதிகளுக்கான செலவினங்கள் மூன்று மடங்கிற்கு அதிகரித்துள்ளது. நாம் செலுத்தும் வரி முறையாக நாட்டின் வளர்ச்சிக்கு செலவிடப்படுவது மிகவும் தெளிவாக தெரிகிறது.
நம்முடைய நம்பிக்கையும் ஒற்றுமையுமே நம்ம நாட்டை மேலும் உயரத்துக்கு கொண்டுசெல்லும் என ஒரு சாரார் ஜிஎஸ்டி வரிவிதிப்புக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.
ஆனால், நிர்மலா சீதாராமனின் புதிய ஜிஎஸ்டி அறிமுகமானதில் மக்கள் பெரும் குழப்பத்தில் தவிக்கின்றனர்.
பழைய எலக்ட்ரிக் வாகனங்களுக்கு 18 சதவீத ஜிஎஸ்டியை அரசு விதித்துள்ளது. இந்த முடிவிற்குப் பிறகு ரூ.6 லட்சத்துக்கு கார் வாங்கி, பின்னர் ரூ.1 லட்சத்துக்கு விற்றால் ரூபாய் 5 லட்சம் மார்ஜின் மீது 18% ஜிஎஸ்டி செலுத்த வேண்டும். அதாவது ரூ.5 லட்சத்துக்கு ரூ.90,000 வரி. இது மக்கள் மத்தியில் குழப்பத்தை அதிகரித்துள்ளது.
பயன்படுத்தப்பட்ட மின்சார வாகனங்களின் மறுவிற்பனைக்கு 18 சதவீத வரி விதிக்க ஜிஎஸ்டி கவுன்சிலின் சமீபத்திய முடிவு பல குழப்பங்களை உருவாக்கியுள்ளது. கார்களின் மறுவிற்பனையின் மார்ஜின் மதிப்பு மீது வரி விதிக்கப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
ஆனால் பயன்படுத்திய கார்களை விற்பவர்கள் வரி செலுத்த வேண்டும் என்று தவறாக புரிந்து கொள்ளப்பட்டது. பயன்படுத்திய கார்களின் மறுவிற்பனையில் ஈடுபட்டுள்ள வணிக நிறுவனங்கள் வரி செலுத்தப்பட வேண்டும். தனிப்பட்ட விற்பனையாளரால் வரி செலுத்த வேண்டிய அவசியமில்லை.
சனிக்கிழமை நடைபெற்ற 55-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தின் செய்தியாளர் சந்திப்பின் போது, வணிக நிறுவனங்களால் விற்கப்படும் பயன்படுத்தப்பட்ட மின் வாகனங்களுக்கு 12 சதவீதத்திற்கு பதிலாக 18 சதவீத ஜிஎஸ்டிக்கு குழு ஒப்புதல் அளித்தது. இதை உதாரணத்துடன் விளக்கிய நிர்மலா சீதாராமன், ஒரு காரை ரூ.12 லட்சத்துக்கு வாங்கி, ரூ.9 லட்சத்துக்கு பயன்படுத்திய காராக விற்றால், விலை வித்தியாசத்துக்கு வரி விதிக்கப்படும் என்று கூறியிருந்தார்.
இதனால் குழப்ப நிலை ஏற்பட்டது. இதனால், காரை விற்றால், வரி விதிக்கப்படும் என, மக்கள் கருதினர். அதேசமயம் அவர் தனது காரை நஷ்டத்தில் விற்பார். இதனால் சாமானியர்கள் மத்தியில் இந்த குழப்பம் மேலும் அதிகரித்தது.
கார்களை மறுவிற்பனை செய்யும் முயற்சிகளுக்கு அத்தகைய வரி விதிக்க கவுன்சில் முன்மொழிந்துள்ளது. இதற்கு முன், பயன்படுத்திய மின் வாகனங்களின் மறுவிற்பனைக்கு 12 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்பட்டு, 18 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இந்த ஜிஎஸ்டியும் லாப வரம்பில் மட்டுமே செலுத்த வேண்டும். இதை ஒரு உதாரணத்துடன் புரிந்து கொள்ள முயற்சிப்போம். ஒரு டீலர் பயன்படுத்திய மின்சார வாகனத்தை ரூ.9 லட்சத்துக்கு வாங்கி, ரூ.10 லட்சத்துக்கு மறுவிற்பனை செய்தால், ரூ.1 லட்சத்துக்கு லாபத்தில்தான் ஜிஎஸ்டி விதிக்கப்படும். அதே சமயம், இருவர் தங்களுக்குள் இதுபோன்ற பரிவர்த்தனை செய்தால், அதற்கு வரி விலக்கு அளிக்கப்படும்.
நீங்கள் ரூ.18 லட்சத்திற்கு ஒரு காரை வாங்கி, அதை ரூ.13 லட்சத்திற்கு நண்பர் அல்லது உறவினர் அல்லது தெரிந்தவருக்கு விற்றால், ஜிஎஸ்டி விதிக்கப்படாது.
ஒரு டீலர் ஒரு காரை ரூ.13 லட்சத்துக்கு வாங்கி ரூ.17 லட்சத்துக்கு விற்றால், ரூ.4 லட்சம் லாப வரம்பில் மட்டுமே 18 சதவீத ஜிஎஸ்டி பொருந்தும். அதாவது, இப்போது பழைய காரை வாங்கும் போது, அது பெட்ரோல், டீசல் அல்லது மின்சார வாகனமாக இருந்தாலும், லாப வரம்பில் 18 சதவீதம் வரி செலுத்த வேண்டும்.
இதனால் செகண்ட் ஹேண்ட் மின்சார வாகன சந்தையின் கவலைகள் அதிகரித்துள்ளன. அதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. டீலர் மார்ஜின் மீதான வரி காரணமாக, வாங்குபவர்களுக்கு வாகனங்களின் விலை அதிகரிக்கும். அதேசமயம், புதிய மின்சார வாகனம் வாங்கும் போது, 5 சதவீத ஜிஎஸ்டி மட்டுமே செலுத்த வேண்டும். மறுவிற்பனை மின்சார வாகனங்களுக்கான வரிவிதிப்பில் மாற்றங்கள் மின்சார வாகன விற்பனையை ஊக்குவிப்பதில் அதிக சவால்களை உருவாக்கலாம்.