அப்ரூவர் ஆகப்போகிறார் செந்தில்பாலாஜி. அப்படி ஒன்று நடந்தால் திமுக கதி அதோ கதிதான். அதனால் சாதிக்பாட்ஷா2.0 தான் செந்தில்பாலாஜியின் நிலைமை என்கிற பரபரப்பு இருக்கிறது. திமுகவால் செந்தில்பாலாஜியின் உயிருக்கு ஆபத்து என்று இப்படி ஒரு பக்கம் செய்திகள் பரவிக்கொண்டிருக்க, பாஜகவால் செந்தில்பாலாஜி உயிருக்கு ஆபத்து என்று கூறியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.
சோதனை செய்ய வந்த வருமானவரித்துறை அதிகாரிகளை கண்டபடி திட்டி, மிரட்டி, அவர்கள் வந்தவாகனங்களை உடைத்து அவர்களை சுவர் ஏறி குதித்து தாண்டி ஓட வைத்த செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் , ‘கிளம்பு கிளம்பு அந்துபோச்சு, இது காலா கில்லா இங்க இருந்து ஒரு பிடி மண்ணை கூட எடுத்துட்டு போக முடியாது’ என்று போஸ்டர் அடித்து ஒட்டி வருமான வரித்துறை அதிகாரிகளை மேலும் வெறுப்பேற்றினார்கள்.
வருமான வரித்துறை அதிகாரிகளை இப்படி போஸ்டர் அடித்து ஒட்டி வெறுப்பேற்றுகிறார்களே. இது செந்தில் பாலாஜிக்குத்தான் நெருக்கடியை கொடுக்கும் என்ற பேச்சு இருந்தது. இந்த நேரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வந்த போது விமான நிலையத்தின் வெளியே மின்விளக்குகள் திடீரென்று அணைந்ததும் அமித்ஷாவையும் அவரது ஆதரவாளர்களை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. அமித்ஷாவின் கண் சிவந்ததால்தான் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு இந்த கதி என்கிறார்கள்.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் மோடியின் வெற்றிக்காக தமிழகத்து எம்பிக்களை வைத்தும் கணக்கு போடுகிறது பாஜக. திமுக எதிர்கட்சியாக இருந்தாலும் வெளியில் இருந்து தங்களுக்கு ஆதரவு தர வேண்டும் என்று நினைக்கிறது. மிரட்டி இந்த ஆதரவை பெற நினைக்கிறது. இதற்கு செந்தில்பாலாஜி கைதுதான் சரியான ரூட் என்று அதில் பயணிக்கிறது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். செந்தில்பாலாஜியை டெல்லிக்கு தூக்கிச்சென்று மிரட்டி அப்ரூவர் ஆக்கி திமுகவை மிரட்டி வேண்டும் என்று திட்டமிட்ட பாஜக, அமலாக்கத்துறையை ஏவி விட்டிருக்கிறது. ஆனால், செந்தில்பாலாஜி உஷாராக திடீரென்று நெஞ்சுவலி என்று படுத்துக்கொண்டு பாஜகவுக்கு பெப்பே காட்டிவிட்டார். திமுகவும் செந்தில்பாலாஜியை காப்பாற்றிவிட்டது. ஒருவேளை திமுக காப்பாற்றாமல் போயிருந்தால் கூட செந்தில்பாலாஜி அப்ரூவர் ஆவதற்கு வாய்ப்பிருந்தது.
செந்தில்பாலாஜியை முழுவதுமாக காப்பாற்ற வேண்டும் என்றுதான் அவசர அவசரமாக சட்டப்போராட்டத்தில் இறங்கி, அரசு மருத்துவமனையில் இருந்து தங்களது காவேரி மருத்துவமனைக்கு அவரை மாற்றிவிட்டது. இனி திமுகவை காப்பாற்றத்தான் போராடுவார் செந்தில்பாலாஜி என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
அமலாக்கத்துறையினருக்கு பெப்பே காட்டுவதற்காக காரில் படுத்துக்கொண்டு நெஞ்சுவலி என்று கதறி, அதிகாரிகளை உதைத்து ஆர்ப்பாட்டம் செய்தபோது, தரதரவென்று இழுத்து செல்லப்பட்டதில் செந்தில்பாலாஜிக்கு நிறைய காயங்கள் ஏற்பட்டுள்ளன என்கிறார்கள் திமுகவினர். இந்த நிலையில்தான், ’’திமுக வை சீண்ட நினைக்காதே . எங்களுக்கு எல்லாவிதமான அரசியலும் தெரியும். செந்தில் பாலாஜி மீது நடவடிக்கை ஒரு அப்பட்டமான அரசியல். இது ஒரு எச்சரிக்கை தவிர அச்சுறுத்தல் அல்ல. செந்தில் பாலாஜி மீதான புகார் 10 ஆண்டுகளுக்கு முன்பே கொடுக்கப்பட்டது. மனரீதியாக, உடல்ரீதியாக துன்புறுத்தப்படுகிறார், இதய நோய் ஏற்படுத்தியதால் உயிருக்கு ஆபத்து’’ என்கிறார் முதல்வர் ஸ்டாலின்.
அதிமுக ஆட்சிக் காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த காலத்தில் செந்தில் பாலாஜி எலக்ட்ரானிக் டிக்கெட் மெஷின் வாங்கியதில் முறைகேடு தொடங்கி போக்குவரத்துத் துறையில் வேலைக்கு ஆட்களை பணியமர்த்துவதில் வரை அப்போதைய போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஊழல் செய்ததாக வழக்குகளை போட்டதோடு அவரை கைது செய்ய வேண்டும் என பொதுமேடைகள் முதல் சட்டமன்றம் வரை பேசியது அன்று எதிர்கட்சியாக இருந்த திமுக வும் அப்போதைய எதிர்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலினும் தான். அந்த வழக்கு தான் இப்போது உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின் படி அமலாக்க பிரிவு இன்று செந்தில் பாலாஜியை கைது செய்யும் அளவுக்கு வளர்ந்து வந்திருக்கிறது. அப்படி இருக்க இதனை பழிவாங்கல் என்று அப்போது பழி போட்ட திமுகவும் முதலமைச்சர் ஸ்டாலினும் இப்போது சொல்வது நகைச்சுவையின் உச்சமே. திமுக இனியாவது திருந்த வேண்டும். இல்லையேல் இன்னும் இன்னும் பல தலைக்குனிவுகளை அக் கட்சியும் அதன் ஆட்சியும் சந்திக் வேண்டியிருக்கும் என்று எச்சரிக்கிறார் மூத்த பத்திரிகையாளர் மருது அழகுராஜ்.
செந்தில் பாலாஜி மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் உள்ள குற்றங்களை புதிதாக விசாரிக்க உத்தரவு பிறப்பித்தது உச்சநீதிமன்றம் தான். விசாரணை அதிகாரியின் ஒரு இடத்தில் இருந்தால் அதை அமைக்க பரிசீலனை செய்யலாம் என உச்சநீதிமன்றம் கூறியது. ஆனால் இதுவரை தமிழக அரசு உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் செயல்படவில்லை. இப்போது உச்சநீதிமன்றத்தை எதிர்க்கிறாரா ஸ்டாலின்? அமலாக்கத்துறையின் கடமையை தொடர உத்தரவு பிறப்பித்த உச்சநீதிமன்றத்தை எச்சரிக்கிறாரா? எப்படி ஒரு நபர் இதய நோயை சில மணி நேரத்தில் உருவாக்குவார்? 10 வருடம் ஆன புகாருக்கு SIT உத்தரவு போட்டது உச்சநீதிமன்றம் தான் என்று தெரிந்தும்? செந்தில் பாலாஜிக்கு ஆதரவு தர உச்சநீதிமன்றத்தை எதிர்க்க , எச்சரிக்க மு.க.ஸ்டாலினை கட்டாயப்படுத்துவது எது? வேலைக்காக பணம் ஏமாற்றும் மோசடியில் ஈடுபட்ட ஒருவருக்கு ஏன் இவ்வளவு ஆதரவு? என்று சரமாரி கேள்விகளை இருக்கிறார் தமிழக பாஜக துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி.