விஜய் வெளிப்படையாக அறிவிக்காத போதும் அவர் அரசியலுக்கு ஆயத்தமாகிவிட்டார் என்பதையே அவரின் அண்மைக்கால செயல்கள் ஒவ்வொன்றும் சொல்லி வருகின்றன. அதே நேரம் அவரின் ஒவ்வொரு செயலுக்கும் சர்ச்சைகளும் சுழன்றடித்து வருகின்றன. உலக பட்டினி தினத்தில் ஒரு நாள் மதிய உணவு வழங்கிய போது அம்மா உணவகம், பள்ளியில் காலை சிற்றுண்டி, மதிய உணவு உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்படுகிறது. ஆலயங்களில் நாள்தோறும் அன்னதானம் வழங்கப்படுகிறது. தொண்டு நிறுவனங்கள் மூலம் சாலையோரங்களில் இருப்பவருக்கு உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இப்படி பசியை போக்க நாலாபுறமும் இருந்து கைகள் நீண்டு கொண்டிருக்கும் போது, விஜய் ஏன் ‘சோற்று அரசியலை’ முன்னெடுக்கிறார்? வேறு ஏதாவது உருப்படியாக செய்ய வேண்டியது தானே? என்ற கேள்வி எழுந்தது . அதனால் தானோ என்னவோ தெரியவில்லை . விஜய் கல்வி விழாவை நடத்தினார். ஆனால், அதிலும் சர்ச்சைகள் வெடித்திருக்கின்றன.
அரசியலுக்கு வரும் நோக்கத்தில் தான் தனது ரசிகர் மன்றத்தினரை மக்கள் இயக்கமாக மாற்றினார் விஜய். இதன் அடுத்த கட்டமாக இந்த இயக்கம் கட்சியாக உருவெடுக்க போகிறது என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. உள்ளாட்சி தேர்தலில் தனது மக்கள் இயக்கத்தினருக்கு அனுமதி அளித்து அவர்களை தேர்தலில் போட்டியிட வைத்து அதில் அவர்கள் பெற்ற வெற்றியைக் கண்டு பெரிதும் மகிழ்ந்து அவர்களை நேரில் அழைத்து பாராட்டினார் விஜய். இதன் அடுத்த கட்டமாக அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவிக்க வேண்டும் என்று மன்றத்தினருக்கு அறிவுறுத்தி இருந்தார் விஜய். அவர்களும் அவ்வாறு செய்தனர் . அடுத்து உலக பட்டினி தினத்தில் அன்று ஒரு நாள் மதியம் தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் தனது மக்கள் இயக்கத்தின் மூலமாக மதிய உணவு படைத்தார் விஜய்.
அடுத்தடுத்து இப்படி அதிரடி காட்டி வந்த விஜய் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு வெற்றி பெற்று தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளை நேரில் வரை அழைத்து அவர்களுக்கு பாராட்டு சான்றிதழ், கல்வி விருது கொடுத்து அவர்கள் கல்வியில் மேலும் மேலும் வளர ஊக்குவித்து வாழ்த்தினார் விஜய் . அந்த விழா மேடையில் பேசிய விஜய், இப்படி ஒரு நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்பதற்கு முன் உதாரணமாக இருந்தது அசுரன் படத்தின் ஒரு டயலாக் தான் என்று குறிப்பிட்டிருந்தார் . காடு இருந்தா எடுத்துக்குவாங்க. ரூபா இருந்தா புடுங்கிக்குவானுங்க. படிப்பை மட்டும் உன்கிட்ட இருந்து யாராலயும் எடுத்துக்க முடியாது எனும் அந்த டயலாக் தன்னை ரொம்ப ஈர்த்ததால் அதில் உள்ள உண்மையை புரிந்து கொண்டு அதனால் தான் இப்படி ஒரு கல்வி விழாவை நடத்த முன் வந்ததாக குறிப்பிட்டார்.
அந்த விழாவில் பேசிய விஜய், மாணவர்களுக்கு பாடப் புத்தகங்களை தவிர அம்பேத்கர், பெரியார், காமராஜர் போன்ற தலைவர்களையும் படிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். தனது அசுரன் பட டயலாக்கை குறிப்பிட்டதால் அது குறித்து மகிழ்ந்த இயக்குநர் வெற்றிமாறன், பெரியார் -காமராஜர் -அம்பேத்கர் உடன் அண்ணாவையும் படிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
பெரியாரை படிக்க வேண்டும் என்று விஜய் சொன்னதற்கு பெரிதும் நிகழ்ந்து போய் இருக்கிறார் நடிகர் சத்யராஜ் . பெரியாரின் மீது தீவிர பற்று வைத்திருக்கும் அவர் இளைய தலைமுறை நம்பிக்கை நட்சத்திரமாக இருக்கும் விஜய் அம்பேத்கர்- பெரியார் -காமராஜரை படிக்க வேண்டும் என்று சொன்னது மகிழ்ச்சியான விஷயம் . அவரது கருத்தை வரவேற்கிறேன் என்று கூறியிருக்கிறார் .
விஜய் எத்தனை நல்ல விஷயங்கள் செய்தாலும் இந்த கல்வி விழாவுக்கு முதல் நாள் வெளியான லியோ பட போஸ்டரில் புகைபிடிப்பது போன்று இடம்பெற்றிருந்தது தான் பெரும் சர்ச்சையாக வெடித்து இருக்கிறது. பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தபோது சினிமாவில் புகை பிடிக்கும் காட்சிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதித்தார் . இதனால் இந்திய திரையுலகமே ஆடிப் போனது. ஹாலிவுட் நட்சத்திரங்கள் முதல் கோலிவுட் நட்சத்திரங்கள் வரைக்கும் இந்த கட்டுப்பாடுகளால் கடுமையாக தடுமாறினார்கள். ஆனால் அன்புமணி ராமதாஸ் அமைச்சராக இருக்கும் வரைக்கும் அந்த விஷயத்தில் ரொம்பவே பிடிவாதமாக இருந்தார். அவர் அமைச்சர் பதவியில் இல்லாத போதும் கூட தொடர்ந்து சினிமாவில் புகைபிடிக்கும் காட்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். சர்க்கார் படத்தில் விஜய் புகை பிடிப்பது போன்ற போஸ்டர் வெளியான போது அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார் . தனுஷ் உள்ளிட்ட பல நடிகர்கள் புகை பிடிப்பது போன்ற போஸ்டர்கள் வெளியான போதும் கண்டனம் தெரிவித்து வந்தார் .
அப்படித்தான் லியோ பட போஸ்டருக்கும் அவர் கண்டனம் தெரிவித்தார். இது சர்ச்சையையும் சலசலப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது . நடிகர்கள் தாங்கள் ஏற்றம் நடிக்கும் கேரக்டருக்கு ஏற்ப சில விஷயங்களை செய்து தான் ஆக வேண்டியது இருக்கிறது. நான் வில்லனாக நடித்திருக்கும் ஒரு படத்தில் கூட புகைபிடிக்கும் காட்சியில் நடிக்க வேண்டியது இருந்தது. நடிப்பு வேறு தனிப்பட்ட வாழ்க்கை வேறு என்று நடிகர் சத்யராஜ் இந்த சர்ச்சைக்கு விளக்கம் கொடுத்திருக்கிறார். ஆனாலும் இந்த சர்ச்சை ஓய்ந்தபாடில்லை .
சென்னையில் விஜய் நடத்திய அந்த கல்வி விழாவிற்கு வந்தவர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கிறது . போதை வஸ்துக்கள் அந்த அரங்கிற்குள் யாரும் உள்ளே எடுத்து வராதவாறு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. ஏசி சினிமா தியேட்டர்களில் தான் இந்த கட்டுப்பாடுகள் உள்ளன. அதைப்போலவே இந்த கல்வி விழா அரங்கிற்கு உள்ளே வருபவர்களிடம் சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் மது உள்ளிட்டவை உள்ளே கொண்டு வராதவாறு செக் செய்து அனுப்பப்பட்ட அனுப்பி இருக்கிறார்கள். விஜய் தான் இந்த உத்தரவை போட்டிருப்பார் என்பது என்பதில் மாற்றுக் கருத்து எதுவும் இல்லை.
முதல் நாள் சிகரெட் பிடிப்பது போன்ற தனது போஸ்டரை வெளியிட்டுள்ள விஜய் மறுநாள் கல்வி விழா அரங்கிற்கு போதை வஸ்துக்கள் அனுமதிக்கப்படாமல் பரிசோதனை செய்து அனுப்பப்பட்டு இருக்கிறது. இதனால் விஜய்யின் உண்மையான முகம் எது என்பதில் பலரும் குழம்பிப் போயிருக்கிறார்கள் . எது உண்மையான விஜய்? சிகரெட் சிகரெட் பிடிப்பது போன்ற போஸ்டரை வெளியிட்டதுதான் விஜய்யின் உண்மையான முகமா? இல்லை போதை வஸ்துக்கள் உள்ளே அனுமதிக்கப்படாமல் பரிசோதனை செய்து கட்டுப்பாடாக இருந்தது தான் விஜய் உண்மையான முகம் தான் என்ற கேள்விகள் வலைத்தளங்களில் இன்னும் ஓய்ந்தபாடில்லை.