Homeசெய்திகள்அரசியல்அதிமுக கள ஆய்வு கூட்டத்தை கலவர ஆய்வு கூட்டம் என்பதா ? பயந்து போய் உளறுகிறார்...

அதிமுக கள ஆய்வு கூட்டத்தை கலவர ஆய்வு கூட்டம் என்பதா ? பயந்து போய் உளறுகிறார் உதயநிதி ஸ்டாலின்! – ஆர்.பி. உதயகுமார் விமர்சனம்

-

- Advertisement -

அதிமுக கள ஆய்வு கூட்டத்தை கலவர ஆய்வு கூட்டம் என்பதா ? பயந்து போய் உளறுகிறார் உதயநிதி ஸ்டாலின்! - ஆர்.பி. உதயகுமார் விமர்சனம்சட்டமன்ற துணை தலைவர் ஆர்.பி. உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

”உதயநிதி ஸ்டாலின் தனது பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு பேசும் போதும் கூட, உண்மையை உலகத்திற்கு சொல்லாமல் உண்மையை மூடி மறைக்க எவ்வளவு கவனம் செலுத்துகிறார்.

தமிழகம் முழுவதும் கள ஆய்வு கூட்டம் கலவர ஆய்வு கூட்டம் என்று தனது பாணியில்  பேசி விளம்பரம் தேடுகிறார். இந்த விளம்பர ஆட்சிக்கு முட்டுக் கொடுக்கும் வகையில் உதயநிதி ஸ்டாலின் தன் பிறந்த நாளில் கூட பிறரை வசை பாடுவதே தன்னுடைய கடமை என்று நினைக்கிறார்.

அதிமுக கள ஆய்வு கூட்டத்தில் 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கப்பட்டு அதில் முறையாக உறுப்பினர் சீட்டுகளை கொடுக்க வேண்டும் என்று கழக பொதுச்செயளாலர் எடப்பாடி வழிகாட்டுதல்படி மூத்த தலைவர்கள், அமைச்சர்கள், தலைமை கழக நிர்வாகிகள் ஆகியோர் மாவட்ட கழக செயலாளர் தலைமையில் ஆய்வு கூட்டத்தை நடத்தி வருகிறார்கள், இதன் மூலம் மக்களுக்கு நம்பிக்கையும், தொண்டர்களுக்கு புது எழுச்சியும் உருவாகியுள்ளது.

வருங்கால முதலமைச்சர், கழக பொதுச் செயளாலர் எடப்பாடி இன்றைக்கு கழகத்திற்கு ஒரு புதிய எழுச்சியும், வலிமையையும் உருவாக்குவதை கண்டு இன்றைக்கு திமுக அஞ்சி நடுங்குகிறது என்பதற்கு எடுத்துக்காட்டுதான் பிறந்தநாள் விழாவில் உதயநிதி ஸ்டாலின்னுடைய உளரல் பேச்சு உள்ளது.

இன்னைக்கு வாக்குச்சாவடி வாரியாக இன்றைக்கு கட்டமைப்புகளை வலிமைப்படுத்துவதற்கு பல்வேறு தேர்தல் வியூகங்களை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் உருவாக்கி வருகிறது. இன்றைக்கு கிளைக் கழகத்திற்கு உறுதுணையாக பணியாற்றுவதற்கு, தேர்தல் காலங்களிலே முறையாக வாக்காளர்களிடத்திலே விரிவாக சாதனையை விளக்க பிரச்சாரங்களை எடுத்துச் சொல்வதற்கு, வாக்குச்சாவடி கிளைக் கழகங்கள் என்கிற அந்த கட்டமைப்பை உருவாக்குவதற்கு எடப்பாடி அறிவுறுத்தலின்படி அந்த பணிகள் சிறப்பாக தமிழகம் முழுவதும் உள்ள 38 வருவாய் மாவட்டங்களில் உள்ள கழக அமைப்பு ரீதியான 82 மாவட்டங்களில் உள்ள 234 சட்டமன்ற தொகுதியில் நடைபெற்று வருகிறது.

அதே போல தான் விளம்பர உயரத்தில் இருக்கும் ஸ்டாலினை முட்டுக்கட்டை கொடுக்கும் கூட்டணி நிகழ்ச்சிகள் கலைந்து விட்டால் உண்மை நிலவரம் தெரியும், தனது சொந்தக் காலில் நிற்பதற்கு திராணியில்லாத உதயநிதி ஸ்டாலின் வலிமையைப் பற்றி பேசவும், கள ஆய்வு விமர்சனம் செய்வதற்கும், தன்னுடைய பிறந்தநாள் விழாவிலே ஒரு அநாகரிகமான பேச்சை அரங்கேற்றி, உள்ள அந்த அடிப்படை நாகரீகம் கூட தெரியவில்லை.

82 மாவட்டங்களிலே எல்லோரும் ஒரே மாதிரி கருத்து சொல்ல வேண்டும் என்று சொன்னால் அது செட்டப் செய்து சூட்டிங் போல நீங்களும் உங்கள் தந்தையார் நடத்துகிறீர்களே? அதே போல இது செட்டப் செய்து சூட்டிங்காக இருக்கும். அது எதார்த்த கள நிலவரமாக இருக்காது.

சில மாவட்டங்களில் கருத்து மோதல் விவாதம் சூடான கருத்துக்களை சுவையாக எடுத்து வைக்கப்படுகிறது ஆனால் ஊடகங்களில் ஊதி பெரிதாக்கி வருகிறது.

கலவரம் நடப்பதை போலவும், மக்களிடத்திலே ஒரு பொய் செய்தியை கொண்டு செல்வதில் உதயநிதி ஸ்டாலின் காட்டுகிற அக்கறை என்பது, அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை பார்த்து எப்படி அச்சப்பட்டு பயந்து இருக்கிறார் என்பதுதான் அவருடைய பிறந்தநாள் பேச்சு உள்ளது.

அதிமுகவை வலிமையோடு எழுச்சியோடு எடப்பாடியார் வழி நடத்திவெற்றி நடை போட்டு வருகிறார் கவனம் செலுத்துகிறார் இதை பொறுக்க முடியாமல் உதயநிதி உளறல் பேச்சு உள்ளது.

சொத்து வரி உயர்வு, மின் கட்டணம் உயர்வு இதனால் திமுக மீது மக்கள் கடுமையான கோபத்தில் உள்ளனர் பால் விலை உயர்வு, குப்பைவரி உயர்வு ,சாக்கடை வரி உயர்வு, கட்டுமான பொருள் உயர்வு, ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கிவிட்டு பத்தாயிரம் ரூபாய் உரிமை பறிக்கிற இந்த விலைவாசி உயர்வு என்பது இன்றைக்கு மக்கள் மீது மிகப்பெரிய சுமையை ஏற்றி வைத்திருக்கிறார்கள்.

சட்டம் ஒழுங்கு சீர்கேடு, போதைப்பொருள் நடமாட்டம், எல்லாம் நாம் பார்க்கிற ஒரு அவல நிலையை மூடி மறைக்கின்ற, திசை திருப்புகின்ற இந்த உண்மையை வெட்ட வெளிச்சம் போட்டு காட்டுகிற அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை பலவீனப்படுத்துவதற்காக ஒரு மாய தோற்றத்தை ஏற்படுத்துவதற்காக எதை செய்தாலும் குற்றம் கண்டுபிடிக்கிற ஒரு நிலையை தான் திமுக உள்ளது.

52 ஆண்டுகள் வீர வரலாறு படைத்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பற்றி உதயநிதி ஸ்டாலின் அறிந்திருக்க வாய்ப்பு இல்லை, அவர் அரசியலில் கத்து குட்டி.

அனைத்திந்திய அண்ணா முன்னேற்றக் கழக 52 ஆண்டுகள் வரலாற்றை நீங்கள் முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும் என்று சொன்னால் உங்கள் தகப்பனார் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினிடம் கேளுங்கள்.

திமுகவை வனவாசம் செய்த கட்சி அதிமுக, புரட்சித்தலைவர் இருக்கும்பொழுது கருணாநிதி கோட்டை பக்கம் கூட வர முடியவில்லை, அம்மா உயிரோடு இருக்கும் வரை உங்கள் தந்தையார் வெற்றி சுவட்டை எட்டிப் பார்த்ததில்லை.

எடப்பாடி வலிமையோடு இருந்து வருகிறார். கட்டுகோப்போடு கட்சியை நடத்தி வருகிறார் என்ற பொறாமை வெளிப்பாடு தான் உங்கள் பேச்சு உள்ளது. அதிமுகவை ராணுவ கட்டுப்பாட்டுடன் அண்ணா கூறிய கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்று சிறப்பாக வழிநடத்தி இருக்கிறார்.

இன்றைக்கு வடகிழக்கு பருவமழையில் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்றும் கடமை உங்கள் கண் முன்னால் இருக்கிறது. வறுமையில் வாடும் மக்களை கை பிடித்து தூக்கி விடும் செயல் கண் முன்னே நிற்கிறது. படித்த இளைஞர்களுக்கு புதிய வாழ்க்கை அமைத்து தர உங்கள் கண் நிற்கிறது, ஏழை, எளிய மக்களுக்கு செய்யும் கடமை கண் முன்னால் நிற்கிறது.

அரசு ஊழியர்கள் போராட்டம் செய்கிறார்களே அவர்களை அழைத்துப் பேச கண் முன்னே நிற்கிறது. இது எல்லாம் விட்டுவிட்டு கடமையாற்றாமல் உள்ளீர்கள், விமர்சனம் செய்வதை விட்டு விட்டு மக்கள் சேவையாற்ற முன்வர வேண்டும்” என கூறினார்.

பாதுகாப்பு விதிகளை புறக்கணித்து கட்டப்பட்டுள்ள பாம்பன் பாலம் – வெங்கடேசன், எம்.பி

MUST READ