Homeசெய்திகள்அரசியல்இதுதான் புதிய இந்தியா வா? அம்பேத்கரின் அரசியலமைப்பு சட்டத்தை முடிவுக்கு கொண்டு வர முயற்சிக்கும் இந்தியா...

இதுதான் புதிய இந்தியா வா? அம்பேத்கரின் அரசியலமைப்பு சட்டத்தை முடிவுக்கு கொண்டு வர முயற்சிக்கும் இந்தியா – ராகுல் காந்தி ஆவேசம் !

-

இதுதான் புதிய இந்தியா வா? அம்பேத்கரின் அரசியலமைப்பு சட்டத்தை முடிவுக்கு கொண்டு வர முயற்சிக்கும் இந்தியா - ராகுல் காந்தி ஆவேசம் !

சம்பலுக்கு போலீஸாருடன் நான் மட்டும் செல்லத் தயார். ஆனால் அனுமதி மறுக்கப்படுகிறது என்று காஜிபூர் எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேசத்தில் கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள சம்பலுக்கு  ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் புதன்கிழமை காலை டெல்லியில் இருந்து புறப்பட்டனர். உத்தரப் பிரதேசம் செல்லும் வழியில் காஜிபூர் எல்லையில்  அவர்கள் சம்பலுக்கு செல்வதைத் தடுத்து நிறுத்தும் வகையில், அங்கு போலீஸார் குவிக்கப்பட்டு, சாலையில் தடைகள் செய்யப்பட்டன. பின்னர் வாகனத்தில் இருந்து இறங்கிச் சென்ற ராகுல் காந்தி போலீஸாருடன் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார். இருப்பினும், அவர் அனுமதிக்கப்படவில்லை.

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “நாங்கள் சம்பலுக்கு செல்வதற்கு முயன்றோம், போலீஸார் அனுமதி மறுக்கிறார்கள். மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக அங்கு செல்வதற்கு எனக்கு உரிமை இருக்கிறது. ஆனால், அவர்கள் என்னைத் தடுத்து நிறுத்துகிறார்கள். நான் போலீஸாருடன் தனியாக அங்கு செல்வதற்கு தயாராக இருக்கிறேன். ஆனால், அவர்கள் அதனையும் ஏற்கவில்லை.

இன்னும் சில நாட்களுக்குப் பின்பு நாங்கள் வந்தால் அப்போது அவர்கள் எங்களை அங்கு செல்ல அனுமதிப்பதாக கூறுகிறார்கள். இது மக்களவை எதிர்க்கட்சித் தலைவரின் உரிமைக்கு எதிரானது, அரசியலமைப்பு சட்டத்துக்கும் எதிரானது. நாங்கள் அமைதியாக சம்பலுக்குச் சென்று அங்கு என்ன நடக்கிறது என்று பார்க்கவும், அங்குள்ள மக்களைச் சந்திக்கவும் விரும்புகிறோம்.

அரசியலமைப்புச் சட்டம் எனக்கு வழங்கியிருக்கும் உரிமை மறுக்கப்படுகிறது. இதுதான் புதிய இந்தியா, அரசிலமைப்புச் சட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் இந்தியா, அம்பேத்கரின் அரசியலமைப்பு சட்டத்தை முடிவுக்கு கொண்டு வர முயற்சிக்கும் இந்தியா. அதை எதிர்த்து நாங்கள் தொடர்ந்து போராடுவோம்” என்று தெரிவித்தார். இந்தப் பேட்டியின்போது அரசியலமைப்பு சட்டத்தின் பிரதியை ராகுல் கையில் வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

திருவண்ணாமலையில் வெள்ளத்தில் சிக்கி பலியான மின்வாரிய ஊழியர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி

MUST READ