spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்இரட்டை வேடம்...‘சீமானை போல பாஜகவின் ஏஜெண்ட்தான் விஜய்..?’ நீட் விவகாரத்தில் திருப்பியடிக்கும் திமுக..!

இரட்டை வேடம்…‘சீமானை போல பாஜகவின் ஏஜெண்ட்தான் விஜய்..?’ நீட் விவகாரத்தில் திருப்பியடிக்கும் திமுக..!

-

- Advertisement -
kadalkanni

‘‘எந்தப் பொய்யையும் சொல்லி, தமிழக மக்களை ஏமாற்றிவிடலாம் என்று கனவு காணும் தமிழக ஆட்சியாளர்களின் எண்ணம், இனி வரும் காலங்களில் ஈடேறப் போவதில்லை’’ என்று த.வெ.க., தலைவர் விஜய் தெரிவித்து இருந்தார்.நடிகர் விஜயின் அரசியல் பிரவேசம் குறித்து அஜித் பட நடிகையின் கருத்து!

த.வெ.க., தலைவர் விஜய் பகிர்ந்துள்ள எக்ஸ் தளப்பதிவில், ‘‘எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே, சொந்த நாட்டிலே நம் நாட்டிலே… என்ற பாடல் வரிகள், தற்போதைய தமிழக ஆட்சியாளர்களுக்கு மிகப் பொருத்தமாக உள்ளன. தேர்தலின்போது போலி வாக்குறுதிகள் அளித்து, மக்களை நம்பவைத்து ஏமாற்ற வேண்டும், தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு மீண்டும் மக்களை ஏமாற்ற வேண்டும் என்பது தான் தமிழக ஆட்சியாளர்களின் எண்ணமாக உள்ளது. இதற்குப் பல்வேறு சான்றுகள் உள்ளன. அதில் மிக முக்கியமானது, நீட் தேர்வு விவகாரம் சார்ந்தது.

கடந்த 2021 தேர்தல் பிரச்சாரத்தின் போது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வைக் கண்டிப்பாக ரத்து செய்வோம், நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் எங்களுக்குத் தெரியும் என்று பிரச்சாரம் செய்து, தமிழக மக்களை நம்ப வைத்தவர்கள், தற்போதைய ஆட்சியாளர்கள். ஆனால் தற்போது நீட் தேர்வை ரத்து செய்யும் அதிகாரம் மத்திய அரசிற்குத் தான் உள்ளது. மாநில அரசால் ரத்து செய்ய முடியாது என்று தெரிவித்திருப்பது வாக்களித்த மக்களை ஏமாற்றும் செயல் அல்லவா?

எந்தப் பொய்யையும் சொல்லி, தமிழக மக்களை ஏமாற்றிவிடலாம் என்று கனவு காணும் தமிழக ஆட்சியாளர்களின் எண்ணம், இனி வரும் காலங்களில் ஈடேறப் போவதில்லை’’என்று தெரிவித்து இருந்தார். அன்று:
இதற்கு பதிலடி கொடுத்து வரும் திமுகவினர், ‘‘தமிழ்நாடு அரசு கொண்டு வந்த நீட் எதிரான தீர்மானத்துக்கு தவெக ஆதரவு தெரிவித்தது.
இன்று: நீட் தேர்வு ரத்து ரகசியம் என்னாச்சு? எனக் கேள்வி எழுப்புகிறது’’ என விஜய் பேசிய பழைய வீடியோவை பகிர்ந்து பதிலடி கொடுத்து வருகின்றனர்.

ஆக மொத்தத்தில் விஜய்யும் சீமானை போல இரட்டை முகமூடி‌ அணியும் பாஜகவின் மறைமுக ஏஜென்ட் தான் போல எனத் தெரிவித்துள்ள அவர்கள், ‘‘நீட் தேர்வு ரத்து வாக்குறுதி கொடுத்து, 3 வருடங்களுக்கு பிறகு நடந்த தேர்தலில், மக்கள் 40/40 மதிப்பெண் கொடுத்துள்ளனர்.

சமூக பொருளாதார வளர்ச்சி அளவுகோலில், முதல் இடத்தில் இருக்கும் தமிழ்நாடு, எங்கு தேங்கி உள்ளது? யார் இந்த வளர்ச்சியினால் பயன் அடையவில்லை? அவர்களை வளர்ச்சி அடைய செய்வதற்கு தேவையான திட்டங்கள் என்ன என்று சொல்லி, ஆண்ட கட்சிகளை தாண்டி, மக்களின் மனத்தில் நம்பிக்கை கொடுக்கும் அரசியலை செய்ய இங்கு யாரும் இல்லை என்பது பெரும் வருத்தத்தை அளிக்கிறது.

அந்த நோக்கமே இல்லை, குறை சொல்லும் அரசியல்தான் செய்ய முடியும். அடித்தட்டு மக்கள் முன்னேற்ற அரசியல் எனக்கு புரியாத விசயம் என்று நினைப்போர், தாங்கள் எதில் சிறந்தவர்களோ, அதையே தொடர்வது நல்லது’’ என பதிலடி கொடுத்து வருகின்றனர்.

MUST READ