Homeசெய்திகள்அரசியல்விஜய் என்ன தியாகசீலரா..? ஒட்டுமொத்த இளைஞர் சக்தியையே பாழ்படுத்தும் தவெக..! அரசியல் விமர்சகர்கள் ஆவேசம்

விஜய் என்ன தியாகசீலரா..? ஒட்டுமொத்த இளைஞர் சக்தியையே பாழ்படுத்தும் தவெக..! அரசியல் விமர்சகர்கள் ஆவேசம்

-

- Advertisement -

மற்றவர்களை விட விஜயை மக்கள் நம்ப காரணங்கள் வேண்டாமா? மற்ற கட்சிகள் வேண்டாம் என்று விஜய்யிடம் மக்கள் வருவதற்கு இவரிடம் என்ன சிறப்பு தகுதிகள் உள்ளன? சினிமாவில் க்ளைமாக்ஸில் வசனம் பேசுவது போன்று விஜய் பேசுகிறார்.

இதுவரைக்கும் ஒரு பிரஸ் மீட் வைத்திருக்கிறாரா? புள்ளிவிவரத்தோடு ஆட்சியில் இருப்பவர்களை ஒப்பீடு செய்து விமர்சித்து பேசும் திறன் இருக்கிறதா? குறைந்த பட்சம் இந்தியா விடுதலை அடைந்த காலம்தொட்டு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களின் அரசியல் சரித்திரம் இவருக்கு தெரியுமா? தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களின் பொருளாதார பலம் பற்றிய அடிப்படை ஞானம் இவருக்கு இருக்க வேண்டாமா? தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி மேலும் வளர என்ன செய்யவேண்டும் என்று எங்காவது பேசியிருக்கிறாரா?

சமத்துவம், எல்லோருக்கும் எல்லாம் என்று எல்லோரும் சொல்வதைதான் இவரும் சொல்கிறார். ஆனால், ஜாதிவாரி கணக்கெடுப்பு வேண்டும் என்று சொல்கிறார். அதை நடத்தி அதன் முடிவுகளை வைத்து தான் என்னசெய்வேன் என்று எங்காவது சொல்லியிருக்கிறாரா? ஜாதிவாரி பிரதிநித்துவம், ஜாதிவாரி திட்டங்கள், ஜாதிவாரி வேலை வாய்ப்பு என்று பேசினால் சமத்துவம் அடிபட்டுபோய்விடுமே? இவர் ஒன்றுக்கொன்று முரணாக பேசுகிறாரே? மத்திய அரசை திமுக எதிர்த்தாலும், திமுகவை மத்திய அரசு கடுமையாக பேசினாலும் அவர்கள் இருவரும் மறைமுக கூட்டணி என்று சொல்கிறார்.

இவர் திமுகவை எதிர்க்கிறாரே..? திமுகவும் இவரும் மறைமுகக்கூட்டணி என்று ஏன் சொல்லக்கூடாது? விஜய் கட்சி ஆரம்பித்து இரண்டாவது ஆண்டில் இருக்கிறார். இதுவரைக்கும் மாவட்ட அளவில் பொதுக்கூட்டங்கள் நடக்கவில்லை. என்ன காரணம் என்பது அவரை இயக்கும் அரசியல் இயக்குநர்களுக்கு மட்டும் தான் தெரியும். ஆனால், தனது கட்சி நிர்வாகிகளை, தெருத்தெருவாக, வீடுவீடாகப் போய் தங்கள் கட்சி பற்றி பேசுங்கள் என்கிறார்.

அதை கேட்டு அவர்களும் விசிலடித்து கைதட்டுகின்றனர். விஜயை நம்பி வரும் இளைஞர்கள் பாவம், ஏற்கெனெவே சினிமாவின் மூலம் அவர்கள் எதிர்காலத்தை விஜயே வீணடித்துவிட்டார். இப்போது தங்கள் எதிர்காலத்தை விஜயிடம் அடகு வைத்து, தங்கள் வாழ்க்கையையே அந்த இளைஞர்கள் தொலைக்கிறார்கள். தற்போது கட்சியில் சிறார் அணி என்று ஒன்றையும் ஆரம்பித்துவிட்டார். இதன்மூலம் ஒட்டுமொத்த இளைஞர் சக்தியையே பாழ்படுத்த தயாராகிவிட்டார்.நாளை தவேகவின் முதல் பொதுக்குழு கூட்டம் – நிர்வாகிகளுடன் தலைவர் உரை

காமராஜர் கால் படாத கிராமமே இல்லை என்று சொல்வார்கள். அதனால்தான் அவர் இன்றுவரை போற்றப்படுகிறார். அந்த மனிதரையே தோற்கடித்துவிட்டார்கள். மக்கள் எதிர்பார்ப்பது அறிவில் சிறந்த, ஆற்றல் வாய்ந்த, ஆளுமை மிக்க, பணத்தின் மீது கொஞ்சமும் பற்றுவைக்காத, பொதுவாழ்வில் தூய்மையான ஒரு தலைவனின் நேர்மையான ஆட்சி. விஜய்யால் அப்படிப்பட்ட தியாகசீலர் போன்று அரசியலில் இருக்கமுடியுமா ? விஜய், அதை முதலில் மக்களிடம் நிரூபிப்பாரா ?

ஆச்சர்யமாக இருக்கிறது. ஒருவர் புதிதாக அரசியலுக்கு, அதிலும் ஒரு கட்சியை ஆரம்பித்துக்கொண்டு வருகிறார் என்றால், கொஞ்சமேனும் அரசியலில் அறிவை வளர்த்துக்கொண்டு வருவதுதான் சரியானது. முறையானதும் கூட. ஆனால், இந்த நடிகர் விஜய் அரசியலில் அரைகுறை என்பதை தனது ஒவ்வோர் பேச்சிலும் பளிச்சிடுகிறார். மும்மொழி கொள்கையை பற்றி புரிந்துணர்வு இல்லாமல் இருமொழி கொள்கையை பேசுகிறார். ஆனால், அவரது பள்ளியில் மும்மொழியை திணிக்கிறாரே.. இது சரியா? யோசிக்காமல் உளறிக்கொண்டு பேசுகின்றார்.

MUST READ