பாஜகவுடன் கூட்டணி வைத்தது வருத்தமாக இருந்தாலும் இயக்கத்தை காப்பாற்ற வேண்டிய கடமை நமக்கு உள்ளது. இஸ்லாமியர்கள் வருத்தம் கொள்ள வேண்டாம் என அதிமுக ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ குணசேகரன் பேச்சு.
அதிமுக பாஜக கூட்டணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக ஆலோசனைக் கூட்டம் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் திருப்பூரில் நடைபெற்றது இதில் கலந்து கொண்ட அதிமுக முன்னாள் எம்எல்ஏ குணசேகரன் பேசுகையில் பாஜகவுடன் கூட்டணி வைத்தது வருத்தமாக இருந்தாலும் இயக்கத்தை காப்பாற்ற வேண்டிய கடமை நமக்கு உள்ளது எனவும் இஸ்லாமியர்கள் வருத்தம் அடைய வேண்டாம் எனவும் அதிமுக என்றும் உங்களுடன் துணை நிற்கும் என பேசினார்.
மேலும் முன்னாள் கவுன்சிலர் கண்ணப்பன் பேசுகையில் நாதழுதழுக்க குரல் உடைந்து கூட்டணி வைத்தது தங்களுக்கு வருத்தம் எனவும் இஸ்லாமியர்களுடன் அதிமுக துணை நிற்கும் என்றாா்.
கூட்டத்தில் பாஜக கூட்டணி குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, பொள்ளாச்சி ஜெயராமன், ”பூத் கமிட்டி அமைக்கும் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. திமுக ஊழல் சாம்ராஜ்யம் சரிந்து விட்டது. திமுகவை காப்பாற்ற யாராலும் முடியாது. ஊழல் சகதியில் திமுக ஊறிப்போய் உள்ளது.
எடப்பாடியார் சொல்லும் கட்சியுடன் கூட்டணி என்பதில் உறுதியாக உள்ளோம். யாருக்கும் வருத்தம் இல்லை தெற்கு தொகுதி மற்றும் கண்ணப்பன் வார்டு இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதி என்பதால் இஸ்லாமியர்கள் கேள்வி கேட்பார்கள் என்பது குறித்து பேசினார் குணசேகரனும் கடந்த காலத்தை அடிக்கோடிட்டு பேசினார். எடப்பாடியார் அனைவரையும் ஒருங்கிணைத்து சிறப்பாக வழிநடத்தி வருகிறார். அதிமுக ஒருங்கிணைந்து உள்ளது. ஊடகங்கள் தான் பிரிக்கிறது என தெரிவித்துள்ளாா்.