தமிழகத்தில் விரைவில் தாமரை மலரும்- ஜே.பி.நட்டா
தமிழ்நாட்டில் பாஜக விரைவில் ஆட்சியை கைப்பற்றும் என அக்கட்சி தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய ஜே.பி.நட்டா, “தமிழ்நாட்டில் பாஜக விரைவில் ஆட்சியை கைப்பற்றும். பாஜகவில் வாரிசு அரசியல் இல்லை. மக்களுக்கான நேரடி ஆட்சியே பாஜக. பாஜக கட்சி அலுவலகங்கள் 24 மணி நேரமும் திறந்தே இருக்கும். தமிழ்நாட்டில் 40 ஆண்டு காலம் எந்த கட்சிகளும் கொண்டுவராத ரயில்வே திட்டங்களை கடந்த 9 ஆண்டுகளில் பாஜக கொண்டுவந்துள்ளது.
உலகம் முழுவதும் தமிழ் மக்களின் பெருமையை கொண்டு சேர்ப்பதற்காக பிரதமர் மோடி செயல்பட்டுவருகிறார். 50 ஆண்டுகாலமாக தமிழ்நாட்டை ஆட்சி செய்தவர்கள் என்ன செய்தார்கள்? 18 கோடிக்கும் அதிகமான தொண்டர்களை கொண்ட வலிமையான கட்சி பாஜக. நரேந்திரமோடி ஆனல் பின்பு உலக அளவில் 10-வது இடத்தில் இருந்த இந்திய பொருளாதாரம் 5வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. 40 ஆண்டுகளாக ஆட்சி செய்தவர்கள் தமிழகத்திற்கு என்ன செய்தனர்? எதுவும் செய்யவில்லை. தமிழகத்தில் வாரிசு அரசியலுக்கு பெயர் போனது திமுக. பல்வேறு மாநிலங்களில் குடும்ப அரசியல் நடக்கிறது. தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்.
பாஜகவினர் நம்பிக்கையோடு பணியாற்றி செயல்பட்டால் தமிழகத்தில் நிச்சயமாக ஆட்சியைப் பிடிக்க முடியும். திமுகவில் வாரிசு அரசியல் நடைபெற்று வருகிறது. மாநில கட்சிகள் எல்லாம் குடும்ப கட்சிகளாக உள்ளன.” எனக் கூறினார்.