Homeசெய்திகள்அரசியல்கட்சியின் ரூல்ஸ்... இந்துத்துவா ஆளுமை... பாஜகவின் ரகசியங்களை போட்டுடைத்த கங்கணா ரணாவத்

கட்சியின் ரூல்ஸ்… இந்துத்துவா ஆளுமை… பாஜகவின் ரகசியங்களை போட்டுடைத்த கங்கணா ரணாவத்

-

பாலிவுட் நடிகையும், எம்.பி.யுமான கங்கனா ரனாவத் நடித்துள்ள ‘எமர்ஜென்சி’ திரைப்படம் ஜனவரி 17ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.

முன்னதாக படம் செப்டம்பர் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தணிக்கை குழு அதன் சில காட்சிகள், வசனங்களை குறைத்துள்ளனர். இந்தப் படம் வெளியாவதில் பல தடைகள் இருந்தன. தற்போது சில மாற்றங்களுக்குப் பிறகு இப்படம் ஜனவரி 17ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.பாஜக சார்பில் தேர்தலில் போட்டியிடும் கங்கனா ரனாவத்!

கங்கனா இதுவரை தனது கேரியரில் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். பாலிவுட்டில் தனி அடையாளத்தை ஏற்படுத்திய பிறகு, அரசியலில் நுழைந்தார். மக்களவை தேர்தலில் ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள மண்டி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இப்போது சமீபத்தில் ஒரு பேட்டியில் அவரிடம் அரசியல் பற்றி ஒரு சுவாரஸ்யமான கேள்வி கேட்கப்பட்டது.மீண்டும் மீண்டும் தள்ளிப்போன கங்கனாவின் 'எமர்ஜென்சி'..... புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!

‘அஜெண்டா ஆஜ்தக் 2024’ நிகழ்ச்சியில் கங்கனா கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பல கேள்விகளுக்கு அவர் சுதந்திரமாக பதிலளித்தார். ‘‘அரசியலில் ஸ்கிரிப்ட் இல்லை. வழிகாட்டும் இயக்குனரும் இல்லை. காலப்போக்கில் இவற்றை நான் கற்றுக்கொள்கிறேன். அரசியலில் இருக்கிறோம் என்பதற்காக நாடகம் நடத்துகிறோம் என்று அர்த்தம் இல்லை. கேலி செய்வது வேறு. எங்கள் கட்சியில் பார்த்தால் ஆர்.எஸ்.எஸ் பின்னணியில் இருந்து வந்தவர்கள், அரசியல் பின்புலம் இல்லாத பல தலைவர்கள் இருக்கிறார்கள். இந்த உணர்வுகள் அனைத்தும் இந்துக்கள் என்பதால் வந்தது.

எங்கள் கட்சியில் உள்ள அனைவருக்கும் இந்துத்துவா உணர்வு உள்ளது. இது ஒரு உண்மையான உணர்வு, உண்மையான ஆளுமை. நம்மை முழுமையாக நிரூபிக்க ஒரு வாய்ப்பு கிடைக்கும். ஆனால் கட்சியின் சில வழிகாட்டும் கொள்கைகள் உள்ளன. அவற்றைப் பின்பற்றுவது அவசியம். ஒன்றுக்கு இரண்டு முறை என்னென்ன விஷயங்களை தவிர்க்க வேண்டும் என்பது குறித்த பரிந்துரைகளைப் பெறுவோம்.

உதாரணத்திற்குச் சொல்வதானால், அது விவசாயிகள் பிரச்சினையாக இருந்தாலும் சரி, இடஒதுக்கீடு பிரச்சினையாக இருந்தாலும் சரி. எனவே ஓரிரு முறை அதைப் பற்றி பேச மறுத்துவிடுகிறோம். ஒரு கட்சி என்ற ரீதியில் அது குறித்த எமது நிலைப்பாட்டை முன்வைக்க செய்தித் தொடர்பாளர்கள் உள்ளனர். அவர்கள் இதைப் பற்றி தெளிவாகப் பேசுவார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

MUST READ