Homeசெய்திகள்அரசியல்எடப்பாடி பழனிசாமி கொள்லைபுற வழியாக ஆட்சியைப் பிடித்தவர் - கோவை செல்வராஜ்

எடப்பாடி பழனிசாமி கொள்லைபுற வழியாக ஆட்சியைப் பிடித்தவர் – கோவை செல்வராஜ்

-

- Advertisement -

மதவாத கட்சி தலைவர்களுக்காக இடுப்பில் வேட்டி கட்டிக்கொண்டு சாமியார்களை போல் வேலை செய்கின்ற அதிமுக தலைவர்களுடன் இருக்க நான் விரும்பவில்லை. தெளிவான முடிவெடுத்து தான் திமுக வில் இணைந்தேன் என்று கோவை செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

அதிமுக வில் ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்த முன்னாள் எம்.எல்.ஏ கோவை செல்வராஜ் இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்தார்.

கோவை செல்வராஜ் இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்தார்.
திமுகவில் இணைந்தார்

அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது, காலிலே விழுந்து கொள்லைபுறம் வழியாக ஆட்சியைப் பிடித்த எடப்பாடி பழனிச்சாமிக்கு மு.க.ஸ்டாலினை பற்றி பேசுவதற்கு யோகியதை கிடையாது. நான் நான்கரை ஆண்டு காலமாக அவர்களுக்கு வக்காலத்து வாங்கி பேசியதற்கு இன்று மக்கள் இடத்தில் பாவ மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

அதிமுக என்ற கட்சி இப்பொழுது கம்பெனி ஆகிவிட்டது. உண்மையான அண்ணா திமுக தொண்டர்கள் முதல்வர் ஸ்டாலின் தலைமையேற்று திராவிட பாரம்பரியத்தை தமிழ்நாட்டில் என்றைக்கும் செயல்படுத்த வேண்டும் என்று கோவை செல்வராஜ் கேட்டுக்கொண்டார்.

இன்றைய தினம் நானும் என்னோடு கோவை மாவட்டத்தில் இருந்து தொழிற்சங்க தலைவர் கோவை பாரதி, உள்ளிட்டோர் அமைச்சர் செந்தில் பாலாஜியோடு கலந்து பேசி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து திமுகவில் எங்களை இணைத்துக் கொண்டோம்.

கோவை மாவட்டத்தில் இருந்து தொழிற்சங்க தலைவர் கோவை பாரதி, உள்ளிட்டோர் அமைச்சர் செந்தில் பாலாஜியோடு கலந்து பேசி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து திமுகவில் எங்களை இணைத்துக் கொண்டோம்.

1971 இல் 14 வயதில் திமுகவிற்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு கேட்டு செயல்பட்ட நான், இவ்வளவு நாட்கள் கழித்து மீண்டும் தாய் கழகத்தில் இணைந்து செயல்படுவதற்கு வாய்ப்பை கொடுத்தமைக்கு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். இந்த நான்கரை ஆண்டு காலமாக சுனாமி வந்து நாட்டில் அழிவுகளை ஏற்படுத்தியதை போல் எடப்பாடி பழனிசாமி தலைமையில் பெரிய சுனாமி ஒன்று மக்களையும், நாட்டையும் ஏமாற்றி தமிழ்நாட்டை அழிவு பாதைக்கு அழைத்து சென்றனர்.

அவரது செயல்பட்டின் மூலம் இன்று தமிழ்நாடு சீரழிந்து. அதனை சீர்படுத்தி மக்களுடைய மனநிலையை புரிந்து கொண்டு ஏழை எளியவர்களுக்காக மக்கள் ஆட்சியை நடத்துகிற சமூக நீதியின் பாதுகாவலர் முதல்வர் மு.க.ஸ்டாலின் என்று அவர் தெரிவித்தார்.

மக்கள் பயனடையும் பல்வேறு திட்டங்களை முதல்வர் செயல்படுத்தி வருகிறார். ஒன்றரை கோடி பெண்கள் தினமும் பேருந்தில் இலவச பயணம் மேற்கொள்கிறார்கள். தங்கமணி மின்சார துறை அமைச்சராக இருந்தபோது பத்தாயிரம் விவசாயிகளுக்கு தான் இலவச மின் இணைப்பு வழங்கினார்கள். ஆனால் இன்றைய தினம் ஒன்றரை லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சார இணைப்புகளை கொடுத்து சிறப்பான செயல்பாடுகளை முதல்வரும் மின்சார துறை அமைச்சரும் ஆற்றி வருகின்றனர்.

விரைவில் திமுகவுக்கு ஆதரவாக கோவை மாவட்டத்தை சேர்ந்த அதிமுக தொண்டர்கள் 5 ஆயிரம் பேர் முதலமைச்சர் நேரம் கொடுத்தவுடன் திமுகவில் இணைய உள்ளார்கள்.

எந்த மதவாத கட்சியும் தமிழகத்தில் வேரூன்ற முடியாது. மதவாத கட்சி தலைவர்களுக்காக இடுப்பில் வேட்டி கட்டிக்கொண்டு சாமியார்களை போல் வேலை செய்கிற அதிமுக தலைவர்களுடம் இருக்க நான் விரும்பவில்லை. தெளிவான முடிவெடுத்து தான் திமுக வில் இணைந்திருக்கிறேன் என்று கூறினார்.

MUST READ