Homeசெய்திகள்அரசியல்அதிமுக கை காட்டியதால்தான் ஹெச். ராஜா எம்எல்ஏ ஆனார்- கே.பி.முனுசாமி

அதிமுக கை காட்டியதால்தான் ஹெச். ராஜா எம்எல்ஏ ஆனார்- கே.பி.முனுசாமி

-

- Advertisement -

அதிமுக கை காட்டியதால்தான் ஹெச். ராஜா எம்எல்ஏ ஆனார்- கே.பி.முனுசாமி

நம்பிக்கை துரோகத்தின் சின்னமாக பண்ருட்டி ராமச்சந்திரன் திகழ்கிறார் என அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.

Image

கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி, “பண்ருட்டி ராமச்சந்திரன் எந்த கட்சிக்கும் விசுவாசமாக இருந்தது இல்லை. நம்பகத்தன்மை இல்லாதவர் பண்ருட்டி ராமசந்திரன். நம்பிக்கை துரோகத்தின் சின்னமாக பண்ருட்டி ராமச்சந்திரன் திகழ்கிறார். அதிமுகவுக்கு தவறான பாதையை காட்டியதால்தான் அவர் செயற்குழுவில் இருந்து நீக்கப்பட்டார். திமுக அரசை கலைக்க மத்திய அரசை நாங்கள் கேட்டு, அதை பாஜக ஏற்காததால் கூட்டணியை முறித்ததாக கோலாகல ஸ்ரீனிவாஸ், பாண்டே போன்றோர் சொல்கிறார்கள். இதை வன்மையாக கண்டிக்கிறேன்.

2026 தேர்தலில் எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்துவோம். அண்ணாமலை முதல்வர் வேட்பாளர் என கே.சி. கருப்பண்ணன் தவறாக சொல்லிவிட்டார். அதிமுக கை காட்டியதால்தான் ஹெச். ராஜா எம்எல்ஏ ஆனார். ஹெச். ராஜாவுக்கு எங்களை பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது? 2026 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வரவேண்டியதுதான் எங்கள் இலக்கு. இதில் எங்கிருந்து வந்தார்கள் பாஜக 2024 நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் இவர்களை எந்த அளவிற்கு ஏற்றுக்கொண்டுள்ளனர் என்று தெரியவரும்” என்றார்.

MUST READ