Homeசெய்திகள்அரசியல்தமிழ்நாட்டின் எதிர்காலத்தைக் காக்க ஓரணியில் திரள்வோம்… ஒற்றுமையால் வெல்வோம் – முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு

தமிழ்நாட்டின் எதிர்காலத்தைக் காக்க ஓரணியில் திரள்வோம்… ஒற்றுமையால் வெல்வோம் – முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு

-

- Advertisement -

மக்களவை தொகுதி மறுசீரமைப்பு குறித்து விவாதிக்க மார்ச் 5 ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் என தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்திருந்த நிலையில், இதில் பங்கேற்க 45 அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.தமிழ்நாட்டின் எதிர்காலத்தைக் காக்க ஓரணியில் திரள்வோம்… ஒற்றுமையால் வெல்வோம் – முதலவர் மு.க.ஸ்டாலின் அழைப்புமக்களவை தொகுதிகள் மறுசீரமைப்பு குறித்து வரும் மார்ச் 5-ம் தேதி விவாதிக்கப்படும் எனவும், அதற்காக அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்படும் எனவும் நேற்று (பிப்ரவரி 25) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருந்தார். ”இந்நிலையில், இந்த கூட்டத்தில் பங்கேற்க 45 அரசியல் கட்சிகளுக்கு தமிழ்நாடு அரசு அழைப்புவிடுத்துள்ளது.

அந்த கட்சிகள் விவரம் வருமாறு:

  1. திராவிட முன்னேற்றக் கழகம்
  2. இந்திய தேசிய காங்கிரஸ்
  3. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
  4. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
  5. இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
  6. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்
  7. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
  8. மனிதநேய மக்கள் கட்சி
  9. அகில இந்திய ஃபார்வர்டு பிளாக்
  10. தமிழக வாழ்வுரிமை கட்சி
  11. மக்கள் நீதி மய்யம்
  12. கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி
  13. ஆதி தமிழர் பேரவை
  14. முக்குலத்தோர் புலிப்படை
  15. மூவேந்தர் முன்னேற்றக் கழகம்
  16. மக்கள் விடுதலை கட்சி
  17. அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
  18. பாட்டாளி மக்கள் கட்சி
  19. தமிழ் மாநில காங்கிரஸ் (மூப்பனார்)
  20. தேசிய முற்போக்கு திராவிட கழகம்
  21. அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்
  22. பாரதிய ஜனதா கட்சி
  23. தமிழக வெற்றிக் கழகம்
  24. நாம் தமிழர் கட்சி
  25. புதிய தமிழகம்
  26. புரட்சி பாரதம் கட்சி
  27. தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்
  28. புதிய நீதிக் கட்சி
  29. இந்திய ஜனநாயகக் கட்சி
  30. மனிதநேய ஜனநாயகக் கட்சி
  31. இந்திய சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி
  32. இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம்
  33. பெருந்தலைவர் மக்கள் கட்சி
  34. அனைத்து இந்திய மூவேந்தர் முன்னணி கழகம்
  35. பசும்பொன் தேசிய கழகம்
  36. அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன்
  37. தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சி
  38. கலப்பை மக்கள் இயக்கம்
  39. பகுஜன் சமாஜ் கட்சி
  40. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) விடுதலை
  41. ஆம் ஆத்மி கட்சி
  42. சமதா கட்சி
  43. தமிழ்ப்புலிகள் கட்சி
  44. கொங்கு இளைஞர் பேரவை
  45. இந்திய குடியரசு கட்சி

இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தொகுதி மறுசீரமைப்பு குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது. நாடு முழுவதும் உள்ள மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகளைப் பிரித்தால் தமிழ்நாட்டில் 8 மக்களவைத் தொகுதிகளை இழக்கும் சூழல் ஏற்படும். ஏற்கனவே 39 தொகுதிகள் உள்ள நிலையில், அதில் 8 தொகுதியை குறைத்து 31-ஆக மாற்ற உள்ளனர். இது தொகுதிகள் எண்ணிக்கை பற்றிய கவலை மட்டுமல்ல இது மாநில உரிமை தொடர்பான பிரச்சனை . இதனால் தமிழ்நாட்டின் குரல் நசுக்கப்படும். நமது உரிமையை நிலைநாட்ட இந்த போராட்டத்தை நடத்த வேண்டிய சூழலுக்கு தமிழ்நாடு தள்ளப்பட்டுள்ளது

எனவே, இது மக்களவையில் தமிழ்நாட்டின் பிரநிதித்துவத்தை குறைக்கும் நிலை ஏற்படலாம் என்ற கோணத்தில் தமிழ்நாட்டின் அனைத்து கட்சிகளின் கருத்துகளையும் கேட்பதற்காக இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறவுள்ளது. மேலும் நேற்று இதுகுறித்து பேசிய முதலமைச்சர் மு.க ஸ்டாலின், “தமிழ்நாடு எதிர்கொள்ளவிருக்கும் சில முக்கியமான பிரச்னைகளில் தமிழ்நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் தலைவர்கள் ஒன்றிணைந்து முடிவு எடுக்க வேண்டும். அதற்காகவே இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நம் தாய்த் தமிழ்நாட்டின் எதிர்காலத்தைக் காக்க, கட்சி வேறுபாடுகளைக் கடந்து ஓரணியில் திரள்வோம். சூழ்ந்துள்ள ஆபத்தை நம் ஒற்றுமையால் வெல்வோம்” என்றார்.

பாஜக சதி… தமிழகத்தில் பறிபோகும் 8 எம்.பி தொகுதிகள்… மு.க.ஸ்டாலின் அதிர்ச்சி தகவல்..!

MUST READ