மக்களவைத் தேர்தல் இறுதி கட்ட பிரச்சாரம் முடிந்துவிட்டது. ஜூன் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது.கடந்த மாதம் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் கட்டமாக 102 தொகுதிகளுக்கும்,ஏப்ரல் 26 ஆம் தேதி 2 ஆம் கட்டமாக 88 தொகுதிகளுக்கும்,மே 7 ஆம் தேதி 3 ஆம் கட்டமாக 94 தொகுதிகளுக்கும்,மே 13 ஆம் தேதி 4 ஆம் கட்டமாக 96 தொகுதிகளுக்கும்,மே 20 ஆம் தேதி 5 ஆம் கட்டமாக 49 தொகுதிகளுக்கும்,மே 25 ஆம் தேதி 6 ஆம் கட்டமாக 58 தொகுதிகளுக்கு தேர்தல் முடிந்துள்ளது.
ஜூன் 1 ஆம் தேதி 7 ஆம் கட்டமாக 57 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான இறுதி கட்ட தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது.
543 தொகுதிகளுக்கான மக்களவைத் தேர்தல்கனா பிரச்சாரம் ஒரு வழியாக முடிந்தது. அதன் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி நடைபெறவுள்ளது.
ஜூன் 4ம் தேதி மதியம் யார் வெற்றிபெருவார் என்று தெரிந்துவிடும்.