Homeசெய்திகள்அரசியல்விஜய் கட்சியின் கொள்கையை பார்க்கும் போது, அவர் திமுகவில் சேர்ந்து கொள்ளலாம்  - H ராஜா

விஜய் கட்சியின் கொள்கையை பார்க்கும் போது, அவர் திமுகவில் சேர்ந்து கொள்ளலாம்  – H ராஜா

-

சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக மாநில தலைமை அலுவலகத்தில், பாஜக மாநில ஒருங்கிணைப்புக் குழு தலைவர் H. ராஜா செய்தியாளர்கள் மத்தியில் பேசினார், அப்போது பேசிய அவர், தமிழகத்தில் இருக்கின்ற திரவிடியன் ஸ்டாக் அரசாங்கம் கோவிலின் நிதியை தொடர்ந்து தவறாக பயன்படுத்தி வருகிறார்கள்.

விஜய் கட்சியின் கொள்கையை பார்க்கும் போது, அவர் திமுகவில் சேர்ந்து கொள்ளலாம்  - H ராஜாமுருகன் மாநாடு நிறைவு உரைக்கு பழனி சென்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அந்த மாநாட்டை ஆன்மிக மாநாடு இல்லை என கூறினார். ஆன்மிக மாநாடு இல்லை என்றால் பழனி முருகன் கோயில் பணத்தை ஏண்டா எடுத்த என கேள்வி கேட்பார்களா இல்லையா?

இந்து விரோதி உதயநிதி ஸ்டாலின், மாற்று மத வெறியர், சனாதன தர்மத்தை டெங்கு, மலேரியா போன்று ஒழிப்பேன் என கூறியவர் அவர். அவர் தான் ஒரு கிறிஸ்டியன் என அவர் ஒப்புக்கொண்டுள்ளார். அப்படி இருக்கும் ஒரு நபரை அங்கே அழைத்து சென்று ஆன்மிக மாநாடு அல்ல என கூற வைக்கிறார்கள். பிறகு எதற்காக கோயில் பணத்தை தொடுகிறார்?

குறிப்பாக வரும் 7 ஆம் தேதி தஞ்சை செல்லும் உதயநிதி ஸ்டாலினுக்கு வரவேற்பு அளிக்க கோயில் பணத்தை பயன்படுத்துகிறார்கள் என தகவல் கிடைத்துள்ளது. அவர் தஞ்சை சென்றால் கோடி கோடியாக இருக்கும் கட்சியின் நிதியை பயன்படுத்தி வரவேற்பு அளிக்க வேண்டியது தானே, அதை விட்டுவிட்டு கோயில் பணத்தை எடுப்பதில் என்ன நியாயம்?

கோயில் பணத்தில் ஒரு பைசா கூட தொட கூடாது. அப்படி தொட்டால், ராம கோபால் சொல்வது போல, மக்கள் அனைவரும் கோவில் முன்பு நின்று மன் அள்ளி தூக்கி வீச வேண்டும் என்கிற நிலையை உதயநிதி ஏற்படுத்தி விட வேண்டாம். திரவிடியன் ஸ்டாக் இருக்கும் இடங்கள் எல்லாம் வடிகட்டிய முட்டாள்கள் இருக்கும் இடம். இப்போதெல்லாம் பாசிசம் எனும் வார்த்தையை இவர்கள் அதிகம் பயன்படுத்துகிறார்கள். அதற்கு அர்த்தம் தெரியுமா?

ஒருடவருடைய கொள்கையை, அடுத்தவர்களின் விருப்பத்திற்கு எதிராக தினிப்பதே பாசிசம். அப்படி பார்க்க போனால் திக மற்றும் கம்யுனிஸ்ட் ஆகியோர் தான் பாசிசம். ஆனால் இவர்கள் மத்திய அரசை பாசிசம் என விமர்சனம் செய்கிறார்கள்.

அடுத்த படியாக விஜய் கட்சியின் தீர்மானங்களை பார்க்கும் போது, திமுகவில் அவர் சேர்ந்து கொள்ளலாம் என சொல்ல தோன்றுகிறது. திமுக கொள்கைகள் போல நீட் தேர்வை ஒழிக்க வேண்டும் என்கிறார். யாருக்காவது நீட் தேர்வுக்கு எதிராக உண்மையில் செயலாற்ற வேண்டும் என்றால் எவ்வாறு அது செயல்பாட்டில் இருக்கிறது என்பதை நிச்சயம் பார்க்க வேண்டும். அது திமுக அமைச்சர், காங்கிரஸ் கூட்டணியால் உருவானது. கார்த்திக் சிதம்பரம் பேரவையில் இதனை டிமாண்ட் செய்து வாங்கினார்.

அடுத்ததாக கச்ச தீவு விவகாரம் தொடர்பான விஷயத்தில், வெளியுறவுத் துறையின் ஒப்பந்தங்களை மத்திய அரசு உடன் செயல்படுத்த முடியாது என்பதை விஜய் புரிந்து கொள்ள வேண்டும். திமுக கொள்கையையே விஜய் மீண்டும் மீண்டும் சொல்லி கொண்டிருக்கிறார். ஒரு காலத்தில் சீமான் பாஜகவின் B டீம் என்று சொன்னார்கள், இப்போது விஜய் -ஐ B டீம் என்று சொல்கிறார்கள். ஒரு கட்சிக்கு எத்தனை B டீம்? அது தாங்காது. அவர் தான் எங்களை ஒன்றிய அரசு என கூறுகிறார் அல்லவா? பிறகு எப்படி பாஜகவுக்கு ஆதரவு?

அஜித் அவர்களுக்கு உதயநிதி வாழ்த்து தெரிவித்த விவகாரத்தில், உண்மையில் திமுகவின் தற்போதைய நிலைமை என்ன தெரியுமா? தண்ணீருக்குள் விழுந்து இறந்த ஒருவரின் நிலை தான். தல கிடைக்க மாட்டாரா? அஜித் கிடைக்க மாட்டாரா என ஏதாவது முயற்சி செய்து வருகிறார்கள்.

திரவிடியன் பார்டி வளர்ந்ததே சினிமாவால் தான். கருணாநிதி ஒருமுறை சிறுபான்மை என்றால் அடங்கி போக வேண்டும் என கூறியுள்ளார். இது பிராமணர்களை பார்த்து தானே சொன்னார். அவர்கள் கொள்கைகளை தாண்டி இயக்க ரீதியில் பாசிசம் செய்கிறார்கள். திமுகவை சேர்ந்த தெலுங்கு பேசுகிற அமைச்சர்கள் எனது தனிப்பட்ட நண்பர்கள். ஈ வே ரா என்பவர் ஒரு காட்டுமிராண்டி. தமிழ் மொழியை சனியன் தமிழ் என பேசியவர் ஈ வே ரா. அவரை கொண்டாடி மொழி முக்கியத்துவம் பேசுகிறது திமுக என்றார்.

புதிய கட்சியோ, பழைய கட்சியோ எல்லோரும் திமுகவை எதிர்த்து தான் வருகிறார்கள் – முதலமைச்சர் ஸ்டாலின்

MUST READ