Homeசெய்திகள்அரசியல்இந்தியா கூட்டணிக்கு 295 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் - மல்லிகார்ஜுன் கார்க்கே உறுதி

இந்தியா கூட்டணிக்கு 295 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் – மல்லிகார்ஜுன் கார்க்கே உறுதி

-

இந்தியா கூட்டணிக்கு 295 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் – மல்லிகார்ஜுன் கார்க்கே உறுதி

இந்தியா கூட்டணி கட்சிகள் 295 தொகுதிகளுக்கு மேல் வெற்றிப் பெறும் என்று மல்லிகார்ஜுன் கார்க்கே உறுதியுடன் தெரிவித்துள்ளார்.

இந்தியா கூட்டணிக்கு 295 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் - மல்லிகார்ஜுன் கார்க்கே உறுதி

இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்களின் கூட்டம் டெல்லியில் உள்ள மல்லிகார்ஜுன் கார்க்கே வீட்டில் நடைபெற்றது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன் கார்க்கே தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஆகியோர் கலந்துக் கொண்டுள்ளனர்.

 

இந்தியா கூட்டணிக்கு 295 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் - மல்லிகார்ஜுன் கார்க்கே உறுதி

மேலும் திமுக சார்பில் டி.ஆர்.பாலு, தேசிய மாநாட்டுக் கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார், மார்க்சிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் து.ராஜா
மற்றும் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவும்
கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இந்தியா கூட்டணி கட்சியை சார்ந்த 22 தலைவர்கள் பங்கேற்றனர்.

https://x.com/kharge/status/1796852239039901844

பின்னர் மல்லிகார்ஜுன் கார்க்கே செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் இந்தியா கூட்டணி 295 தொகுதிகளுக்கு மேல் வெற்றிப் பெற்று ஆட்சி அமைக்கும் என்றார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளில் முழுமையாக வாக்குகள் எண்ணி முடிக்கும் வரை வெளியே வர கூடாது என்று எதிர்கட்சியினருக்கு அறிவுறுத்தினார். பாஜக எப்படி எல்லாம் பிரித்தாளும் சூழ்ச்சியை செய்தது என்பதை மக்களிடம் எடுத்து சென்றோம். அதற்கான பலன் கிடைத்தது என்றார்.

இந்தியா கூட்டணிக்கு 295 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் - மல்லிகார்ஜுன் கார்க்கே உறுதி

பா.ஜ.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் இன்று கருத்து கணிப்பு குறித்து அதிகம் விவாதிப்பார்கள். ஆனால், 295 இடங்களை இந்தியா கூட்டணி குறைந்த பட்சம் வெல்வது உறுதியாகியுள்ளது. இந்தியா கூட்டணி ஆட்சி அமைப்பது உறுதி என்றார்.

எக்காரணத்தை கொண்டும் வாக்கு எண்ணிக்கை முடிந்து சான்றிதழ் பெறும் வரை மையத்தை விட்டு வேட்பாளர்களும் முகவர்களும் வெளியே வர கூடாது என ஆலோசனையில் முடிவெடுத்தாக கூறினார். இந்தியா கூட்டணிக்கு ஆட்சியமைக்கும் அளவுக்கு பெரும்பான்மை கிடைக்கும் என்பது உறுதி என்றார்.

MUST READ