Homeசெய்திகள்அரசியல்ரூ.2500 கோடி லஞ்சம் கேட்ட அதானி - மாணிக்கம் தாகூர் பேட்டி

ரூ.2500 கோடி லஞ்சம் கேட்ட அதானி – மாணிக்கம் தாகூர் பேட்டி

-

- Advertisement -

ரூ.2500 கோடி லஞ்சம் கேட்ட அதானி - மாணிக்கம் தாகூர் பேட்டி

அதானியின் விவகாரத்தை திசை திருப்பவே ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் குறித்து விவாதிக்கப்படும் என பாஜக அரசு அறிவித்திருக்கிறது என்று விருதுநகரில் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் பேட்டி அளித்துள்ளார்.

விருதுநகரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் ,வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் அதானி விவகாரம் குறித்து கேள்வி எழுப்புவோம் என்பதால் இந்த விவகாரத்தை திசை திருப்பவே ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் குறித்து விவாதிக்கப்படும் என பாஜக அரசு அறிவித்திருக்கிறது என்றார்.

விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர், அவரது அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் அப்போது அவர் கூறியதாவது ;
அமெரிக்காவில் அதானிக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி, அதானியை காப்பாற்ற தொடர்ந்து முயற்சி செய்து வருவது நாட்டுக்கும் நல்லதல்ல. பொருளாதாரத்திற்கும் நல்லதல்ல.

அதானியின் முக்கிய ஊழல்களை சொல்ல வேண்டியுள்ளது. அமெரிக்க கம்பெனியுடன் சேர்ந்து ஒப்பந்தம் போட்டு ரூ. 25ஆயிரம் கோடியை இந்தியாவிற்கு கொண்டு வந்துள்ளார். அதை சூரிய சக்தி மின் திட்டத்தில் முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் என அங்குள்ள மக்களை ஏமாற்றி கொண்டு வந்துள்ளார்.
மேலும், விலைக்கு வாங்க வேண்டுமென நினைத்தார்களோ, அதை மாநில அரசுகள் வாங்க தயார் இல்லை. 2500 கோடி ரூபாய் லஞ்சமாக தர வேண்டுமென தெரிவித்துள்ளார். இது புரோக்கர் வேலையாகும்.

காங்கிரஸ் கட்சியைப்பொருத்தவரை அதானியின் போக்கை மோடி முழுமையாக ஆதரிக்கிறார். அவரை காப்பாற்ற அவர் எந்த எல்லைக்கும் செல்வார்.
இப்படிப்பட்ட குற்றச்சாட்டு வேறு எங்கோ சொல்லப்பட்டிருந்தால், குறைந்தபட்ச விசாரணைக்கு கூட அழைக்கவில்லை.

2023 நவம்பர் முதல் இந்த பிரச்சனை நடைபெற்று வருகிறது. இதை எதிர்த்து இந்தியா கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் போராடும்.ஏழை மக்களின் வயிற்றில் அடிக்கும் வகையில் அதானியின் தொழில் முறைகள் உள்ளன. வரும் நாடாளுமன்ற கூட்டத்தில் இது மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கும். அதானி ஒரு குற்றவாளி. அவரைப் பற்றி பேசவே தயார் இல்லாத பிரதமர். அதைப் பற்றி பேசாமல் ஒரு நாடு, ஒரு தேர்தல் என இல்லாத பிரச்சனையை பேசுகிறார்.

தனிநபர் மீதான தாக்குதலை, சட்டம் ஒழுங்கு பிரச்சனை என கூற முடியாது. இதை வைத்து சட்டம் ஒழுங்கு பிரச்சனையாக பார்க்க முடியாது. அதன் அர்த்தத்தை மாற்றி விடக்கூடாது. முன்னாள் முதல்வர் பழனிசாமி, தோல்வி பயத்தில் உள்ளார். எனவே, தனிப்பட்ட பிரச்சனையை சட்டம் ஒழுங்கு பிரச்சனை என கூறுகிறார்.
கூட்டணி கட்சிகள் சீட்டுடன் பணமும் கேட்கின்றனர் என சீனிவாசன் கூறியதற்கு?
ஒன் பிளஸ் ஒன் ஆபருடன் தான் அதிமுக உள்ளது.

1999க்கு பின் காங்கிரஸ் அதிமுகவுடன் கூட்டணி வைக்கவில்லை. பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் தான் இதைப்பற்றி கூற வேண்டும். அதிமுகவின் பொருளாளராக உள்ளார். எனவே,அதானிக்கு எந்த ஒப்பந்தமும் தரவில்லையென மின்துறை அமைச்சர் கூறியுள்ளாரே? அதானிக்கு வழிமுறைகளை மீறி சிவப்புக் கம்பளம் விரித்து சிறப்பு திட்டம் கொடுத்து தொழில் துவங்க வாய்ப்பு தந்துள்ளனர். எல்லாருக்கும் ஒரே மாதிரியான வாய்ப்பு தர வேண்டும் என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

அதிமுக ஆட்சி காலத்தில்தான் அதானிக்கு தமிழகத்தில் டெண்டர் தந்துள்ளனர். பாஜக அரசு போட்டியின்றி அதானிக்கு டென்டர் தந்துள்ளனர். 2026 சட்டமன்றத் தேர்தல் காங்கிரஸ் கட்சியைப் பொருத்தவரை ஆட்சி அதிகாரம் ஒருவருக்கே சொந்தம் என கூறுவது இல்லை. ஆட்சியில் பங்கு என்பது கூட்டணிக்கும் பங்கும் தர வேண்டும் என தெரிவித்துள்ளோம்.

மதுரை விமான நிலையம் விரிவாக்கம் பிரச்சனை. 2009 இல் 650 ஏக்கர் தேவைப்பட்டது. அதிமுக ஆட்சியில் சுணக்கம் ஏற்பட்டது. நிவாரணத்தை மாநில அரசு தந்துள்ளது. உயர் நீதிமன்றத்தில் இப்பிரச்சனை உள்ளது. விமான நிலையப் பணிகளும் பாதிக்கக் கூடாது. 24 மணி நேர சேவை என இப்போது தான் அறிவிக்கப்பட்டுள்ளது. சின்ன உடைப்பு மக்களுக்கு நியாயத்தையும் வழங்க வேண்டும்.

வேதாந்த அரிட்டாபட்டியில் , ஒன்றிய அரசு கடந்த 2023 செப்டம்பரில் ஒரு சட்டம் கொண்டு வந்தது. முன்பு, மாநில அரசு சுரங்கம் தோண்டும் இடத்தை தேர்வு செய்து பரிந்துரை செய்யும் வகையில் ஏற்கனவே சட்டம் இருந்தது. ஆனால், அதை மாற்றி, மத்திய அரசு நேரடியாக தேர்வு செய்து விட்டு, மாநில அரசுக்கு தகவல் மட்டும் தெரிவிக்கும் வகையில் சட்டத்தை நிறைவேற்றியுள்ளது.

கடந்த நவம்பர் 16 இல் வலைதளத்தில் பதிவிட்டேன்.அதற்கு காரணம் வேதாந்தா நிறுவனம் 2 இடங்களில் சுரங்கம் தோண்ட அனுமதி வழங்கியுள்ளது டெல்லியில் இருந்து தகவல் வந்தது. அதில், ஆந்திராவில் உள்ள பாப்பலாபுரத்திலும், நாயக்கர் பட்டியிலும் சுரங்கம் தோண்ட வேதாந்தாவின் துணை அமைப்பான இந்துஸ்தான் சிங் லிமிடெட் என்ற நிறுவனத்திற்கு தோண்ட அனுமதி வழங்கியுள்ளனர். இதனால் அழகர் கோவில் மலையும், அரிட்டா பட்டியின் வரலாறும் அழிக்கப்படும்.

அழகர் கோவில் பழமுதிர்ச்சோலையும், பதினெட்டாம்படி கருப்பசாமியும் இந்துக்களின் முக்கிய நம்பிக்கையாக உள்ள மலைகளாகும். இதைக் கூட பாஜகவினர் பணத்திற்காகவும் அவர்களின் நண்பர்களுக்காவும் விட்டு வைப்பதில்லை. அதை வெளி நாட்டு நிறுவனங்களுக்கு விற்கத் தயாராகி விட்டனர் என இதன் மூலம் நிரூபணம் ஆகி விட்டது.

இதுகுறித்து பிரதமருக்கு விரிவான கடிதம் எழுதியுள்ளேன். மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் மற்றும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆகியோருடன் இணைந்து இப்பிரச்சனையை நாடாளுமன்றத்தில் எழுப்ப உள்ளேன்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

வெண்ணெய் ஒரு கண்ணில் சுண்ணாம்பு ஒரு கண்ணில் – ஜெயக்குமார் குற்றச்சாட்டு

MUST READ