Homeசெய்திகள்அரசியல்மே-2 கட்சியின் போதுக்குழு கூட்டம்:தவறாமல் கலந்து கொள்ளும்படி எடப்பாடி அறிவுறுத்தல்

மே-2 கட்சியின் போதுக்குழு கூட்டம்:தவறாமல் கலந்து கொள்ளும்படி எடப்பாடி அறிவுறுத்தல்

-

- Advertisement -

அடுத்த மாதம் 2-ம் தேதி ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சியின் தலைமை அலுவலகத்தில் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. அப்போது பாஜக உடன் கூட்டணி அமைத்தது குறித்து நிர்வாகிகளுக்கு விளக்கம் அளிக்கப்படும் என தகவல் வெளியிட்டுள்ளது.மே-2 கட்சியின் போதுக்குழு கூட்டம்:தவறாமல் கலந்து கொள்ளும்படி எடப்பாடி அறிவுறுத்தல்

அடுத்த மாதம் 2-ம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது. செயற்குழு உறுப்பினர்களுடன் மாவட்ட செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் இக்கூட்டத்தில் பங்கேற்க எடப்பாடி பழனிசாமி அழைத்துள்ளாா். உறுப்பினர்கள் அனைவரும் தங்களுக்குரிய அழைப்பிதழோடு தவறாமல் கலந்துக்கொள்ள வேண்டும் என அவர் அறிவித்துள்ளாா். ஒன்றிய அரசுடன் கூட்டணி அமைத்த பிறகு அதிமுக செயற்குழு கூட்டம் முதல் முறை கூடுகிறது. ஏற்கனவே செயற்குழு, பொதுக்குழுவை கூட்டாமல் கூட்டணி முடிவு எடுக்கப்பட்டதால் நிர்வாகிகளிடம் அதிருப்தி ஏற்பட்டதாக தகவல் வெளியாகியிருப்பதால், அதிருப்தியில் உள்ள நிர்வாகிகளை சமாதானப்படுத்தும் வகையில் செயற்குழுவில் விளக்கம் கொடுக்கப்படும் என தகவல் கசிந்துள்ளது.

திலக பாமாவுக்கு வடிவேல் ராவணன் கண்டனம்!

MUST READ