Homeசெய்திகள்அரசியல்”வைகோவுக்கு திறமை இல்லை; அவரால் கட்சியை நடத்த இயலாது”

”வைகோவுக்கு திறமை இல்லை; அவரால் கட்சியை நடத்த இயலாது”

-

”வைகோவுக்கு திறமை இல்லை; அவரால் கட்சியை நடத்த இயலாது”

மதிமுக பொதுச்செயலாளார் வைகோவால் கட்சியை நடத்த இயலாது என அண்மையில் கட்சியிலிருந்து விலகிய திருப்பூர் துரைசாமி விமர்சித்துள்ளார்.

துரைசாமி

மதிமுகவை திமுகவுடன் இணைத்துவிடலாம் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு அக்கட்சியின் அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி கடிதம் எழுதியிருந்தார். அதில், “மதிமுகவை தாய் கட்சியான திமுகவுடன் இணைத்து விடுவது சமகால அரசியலுக்கு சாலச்சிறந்தது. மகனை ஆதரித்து அரவணைப்பதும், சந்தர்ப்பவாத அரசியலும் மக்களை எள்ளி நகையாட வைத்துவிட்டது. 30 ஆண்டுகளாக உணர்ச்சிமிக்க தங்களது பேச்சை நம்பி வாழ்க்கையை இழந்த தோழர்களை மேலும் ஏமாற்றாதீர்.

எந்த வைகோ குடும்ப அரசியலை எதிர்த்து பேசினாரோ, அதே வைகோவின் செயல்பாடு குடும்ப அரசியலை ஊக்குவிக்கும் வகையில் இருக்கிறது. மதிமுகவின் சட்ட விதிகளுக்கு எதிராக அவர் செயல்பட்டிருக்கிறார். இன்னும் வைகோவுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் வகையில் குற்றச்சாட்டுகள் உள்ளன. இனிமேலும் மதிமுகவுக்கு எதிர்காலம் இல்லை என்பதால் திமுகவுடன் இணைத்துவிடுவது நல்லது என்கிறேன்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தார். மதிமுகவை திமுகவுடன் இணைக்க வைகோ மறுப்பு தெரிவித்ததால், அதிருப்தி அடைந்த மதிமுக மாநில அவைத் தலைவர் துரைசாமி மதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக அறிவித்தார்.

Image

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த திருப்பூர் துரைசாமி, “வைகோவுக்கு திறமை, ஆற்றல் இல்லை. இனியும் அவரால் கட்சியை நடத்த இயலாது. முதல்வர் ஸ்டாலினுக்கு பாதுகாப்பாக இருப்பேன் எனக் கூறும் வைகோவுக்கு எதுக்கு தனிக்கட்சி?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

MUST READ