அ.தி.மு.க.வின் நிறுவனரும், முன்னாள் தமிழக முதலமைச்சரும், நடிகருமான எம்.ஜி.ஆரின் 36- வது நினைவுத் தினத்தையொட்டி, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
‘பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவேன்’…. தென்காசி தனியார் பள்ளியில் KPYபாலா!
அதைத் தொடர்ந்து, அ.தி.மு.க.வின் சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அ.தி.மு.க.வின் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், கட்சியின் மூத்த நிர்வாகிகள் உள்ளிட்டோர் எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் மலர்தூவி மரியாதைச் செலுத்தினர்.
ஜெயிலரைத் தொடர்ந்து நெல்சனின் அடுத்த படம்…. அவரே கொடுத்த அப்டேட்!
பின்னர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க.வினர் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். அப்போது, மழைநீர் வடிகால் பணிகள் எங்கே…! எங்கே…! 4,000 கோடி ரூபாயும் கரைந்துவிட்டது… கரைந்துவிட்டது. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் பெரும் புகழை எந்நாளும் காப்போம்…! எந்நாளும் காப்போம் …! உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.