Homeசெய்திகள்அரசியல்அமைச்சர் - எம்.பி. நேருக்கு நேர் மோதல்! ஆட்சியருக்கு நேர்ந்த கதி!

அமைச்சர் – எம்.பி. நேருக்கு நேர் மோதல்! ஆட்சியருக்கு நேர்ந்த கதி!

-

அமைச்சர் - எம்.பி. நேருக்கு நேர் மோதல்! ஆட்சியருக்கு நேர்ந்த கதி!
ராஜகண்ணப்பன் நவாஸ் கனி

அரசு விழாவில் அமைச்சரும் எம்பியும் நேருக்கு நேர் மோதி கொண்டதால் ஆட்சியருக்கு அந்த கதி ஏற்பட்டு இருக்கிறது.

அமைச்சர்கள், எம்பிக்கள் கட்சியின், முக்கிய நிர்வாகிகள் எல்லோராலும் அதிகாரிகள் பந்தாடப்பட்டு வருவது வழக்கம் தான். அப்படித்தான் ராமநாதபுரத்திலும் நடந்த விழாவில் அம்மாவட்ட ஆட்சியர் அமைச்சராலும் எம்பியாலும் பந்தாடப்பட்டிருக்கிறார்.

அமைச்சர் - எம்.பி. நேருக்கு நேர் மோதல்! ஆட்சியருக்கு நேர்ந்த கதி!
நவாஸ்கனி

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் வளாகத்தில் தஸ்தகீர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் அரசு விழா நடந்திருக்கிறது. இந்த விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் முன்னிலை வகித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து அமைச்சராக இருக்கும் ராஜகண்ணப்பன், ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிட்டு முஸ்லிம் லீக் கட்சியின் சார்பில் எம்பி ஆக இருக்கும் நவாஸ் கனி அந்த விழாவில் பங்கேற்றுள்ளனர்.

நவாஸ் கனி அந்த விழாவிற்கு வருவதற்கு முன்பாகவே விழா தொடங்கப்பட்டிருக்கிறது . முன்கூட்டியே அமைச்சர் ராஜகண்ணப்பன் அந்த விழாவில் பங்கேற்றிருக்கிறார். பின்னர் தாமதமாக விழாவுக்கு வந்த நவாஸ் கனி, ’’நான் வருவதற்கு முன்னாடியே ஏன் நிகழ்ச்சியை ஆரம்பித்தீர்கள்?’’ என்று ஆட்சியரிடம் எகிறி இருக்கிறார். அப்போது அங்கே இருந்த அமைச்சர் ராஜகண்ணப்பன் முணுமுணுக்க , அதற்கு நவாஸ் கனி பதிலளிக்க, இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு இருக்கிறது.

கூட்டணி கட்சிதான் என்றாலும் இருவருக்கும் இடையேயான இந்த வாக்குவாதத்தில் இருவரின் ஆதரவாளர்களும் மேடை ஏற, அதுவரைக்கும் இருந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறி இருக்கிறது.

அமைச்சர் - எம்.பி. நேருக்கு நேர் மோதல்! ஆட்சியருக்கு நேர்ந்த கதி!
மோதல்

அமைச்சருக்கும் எம்பிக்கும் நேருக்கு நேர் நடந்த மோதலில் ஆட்சியரின் நிலை தான் பெரும் பரிதாபத்திற்கு உள்ளாகி இருக்கிறது. இருவரையும் சமாதானம் செய்ய எவ்வளவோ முயற்சித்து இருக்கிறார் ஆட்சியர் விஷ்ணு சந்திரன் . கடைசியில் அவருக்கே அந்த கதி ஏற்பட்டு இருக்கிறது. இருவரின் ஆதரவாளர்களுக்கும் இடையே நடந்த மோதலில் சமாதானம் செய்து கொண்டிருந்த ஆட்சியரை பிடித்து கீழே தள்ளிவிட்டு இருக்கிறார்கள். இதில் அவர் கீழே தவறி விழுந்திருக்கிறார் .

ஆட்சியருக்கே இந்த கதியா? என்று விழாவிற்கு வந்திருந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார்கள். இதைப் பார்த்ததும் டென்ஷனான நவாஸ் கனி , அந்த நிகழ்ச்சியில் பங்கேற்காமலேயே அங்கிருந்து வெளியேறி இருக்கிறார்.

அமைச்சர் - எம்.பி. நேருக்கு நேர் மோதல்! ஆட்சியருக்கு நேர்ந்த கதி!
விஷ்ணு சந்திரன்

கூட்டணிக்குள் இருந்துகொண்டே ஒரேமேடையில் நேருக்கு நேர் அமைச்சரும் எம்பியும் மோதிக்கொண்ட விவகாரம் பெரிதாக வெடித்த நிலையில், ’’மாவட்ட ஆட்சியர் எந்த முகாந்திரமும் இல்லாமல் நிகழ்ச்சியை முன்கூட்டியே தொடங்கிவிட்டார் . இது பற்றி கேட்டபோது தான் வாக்குவாதம் ஏற்பட்டது . நடந்த சம்பவம் பற்றி மாவட்ட ஆட்சியர் மீது தலைமைச் செயலாளரிடம் புகார் கொடுத்திருக்கிறேன்’’ என்று செய்தியாளர்களிடம் ஆவேசப்பட்டு இருக்கிறார் நவாஸ்கனி.

மோதலால் கீழே தள்ளிவிடப்பட்ட ஆட்சியர் விஷ்ணுசந்திரன், ராமநாதபுரம் எஸ்பி இடம் சம்பவம் குறித்து புகார் அளித்திருக்கிறார். இதனால் ராமநாதபுரம் மாவட்ட திமுக கூட்டணியில் புயல் வீசி அடிக்கிறது.

MUST READ