Homeசெய்திகள்அரசியல்விடுபட்ட மகளிருக்கு உரிமைத் தொகை: 3 மாதகாலத்தில் வழங்கப்படும் – தங்கம் தென்னரசு உறுதி

விடுபட்ட மகளிருக்கு உரிமைத் தொகை: 3 மாதகாலத்தில் வழங்கப்படும் – தங்கம் தென்னரசு உறுதி

-

- Advertisement -

தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை தகுதி வாய்ந்தவர்களுக்கு இன்னும் மூன்று மாத காலத்தில் விண்ணப்பம் பெறப்பட்டு உரிமைத்தொகை வழங்கப்படும் என தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு காரியாபட்டி அருகே புதிய கட்டிடங்களை திறந்து வைத்தாா்.காணாமல் போன பெண்களுக்கான உரிமைகள்: 3 மாதங்களுக்குள் வழங்கப்படும் - தங்கம் தென்னரசு உறுதிவிருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே பல்வேறு கிராமங்களில் பகுதிநேர நியாய விலை கடை மற்றும் சமுதாயக்கூட கட்டிடம் உள்ளிட்ட சுமார் 2 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட கட்டிடங்களை தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு திறந்து வைத்தாா். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், ” பல்வேறு கிராமங்களில் நியாய விலை கடை இல்லாததால் பல கிலோமீட்டர் தூரம் சென்று ரேஷன் பொருட்கள் வாங்க வேண்டிய நிலை இருந்து வந்தது என்று பொதுமக்கள் என்னிடம் கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில் கூட்டுறவுத்துறை அதிகாரிகளிடம் பேசி தர்மாபுரம், உடுப்புக்குளம், கூவர்குளம், துலுக்கன்குளம் ஆகிய கிராமங்களில் பகுதி நேர ரேஷன் கடை திறக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பவே நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுடைய ஆட்சி பெண்களை மையப்படுத்தி பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.

மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்காக இன்றைக்கு நிறைய பேர் மனுக்கள் கொடுத்துள்ளனர். அதில் தகுதி வாய்ந்தவர்களுக்கு விண்ணப்ப படிவம் இன்னும் மூன்று மாத காலத்தில் மீண்டும் பெறப்பட்டு யார் யாருக்கெல்லாம் தகுதி இருக்கிறதோ அவர்களுக்கெல்லாம் நிச்சயமாக மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும். சாலை மறைக்குளத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேருந்து வசதி செய்து தரக் கோரியும், குடிநீர் வசதி செய்து தர கோரியும் கிராம மக்கள் அமைச்சரிடம் மனு அளித்தனர். அதற்கு அமைச்சர் ஊராட்சி செயலாளரிடம் அடுத்த முறை தான் வரும்பொழுது இப்பகுதியில் குடிதண்ணீர் வசதி இருக்க வேண்டும் என்று அமைச்சர் உத்தரவிட்டார்.

மேலும் திருவிருந்தால்புரத்தில் நடைபெற்ற சமுதாயக்கூடம் திறப்பு விழாவின் போது அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் காரியாபட்டியில் உழவர் சந்தையை திறக்க வேண்டும் என கோரிக்கை வைத்து மனு அளித்தனர். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிதியமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் சிறுவர்கள் போட்டி போட்டு அமைச்சருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.இந்த நிகழ்ச்சியில் அரசு அலுவலர்கள் உட்பட திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

சென்னை கொளத்தூரில் மருத்துவமனை…. அமைச்சர் எ.வ.வேலு பெருமிதம்!

MUST READ