சரத்பவார் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்- முதல்வர் மு.க.ஸ்டாலின்
தேசியவாத காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்தும், தேர்தல் அரசியலில் இருந்தும் விலகுவதாக அறிவித்த நிலையில், தனது முடிவை சரத்குமார் மறுபரிசீலனை செய்ய வேண்டுமென முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
2021 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு பதவி விலகும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில் நாடு முழுவதும் மதச்சார்பற்ற அணியை வலுப்படுத்த வேண்டி இருப்பதால் பதவி விலகும் முடிவை கைவிட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
மகராஷ்டிரா அரசியலின் மூத்த தலைவரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவருமான சரத்பவார்(82) கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார். 40 எம்.எல்.ஏக்களுடன் அஜித் பவார் பாஜகவுடன் கூட்டணி வைக்கப்போவதாக சொன்னதால்தான் சரத்பவார் இந்த முடிவை எடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது. இந்திய அரசியல்வாதிகளில் மூத்த தலைவரான சரத்பவார், மகாராஷ்டிரா மாநிலத்தில் 4 முறை முதல்வராக இருந்தவர். காங்கிரஸிலிருந்து 1999 ஆம் ஆண்டில் பிரிந்தார். அவருடன் பிரிந்து வந்த பி.ஏ சங்மா உள்ளிட்டோருடன் இணைந்து தேசியவாத கட்சியை தொடங்கினர் என்பது குறிப்பிடதக்கது.