spot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்கிச்சடி கிண்டியும், சப்பாத்தி உருட்டியும் மோடி வாக்கு சேகரிப்பு

கிச்சடி கிண்டியும், சப்பாத்தி உருட்டியும் மோடி வாக்கு சேகரிப்பு

-

- Advertisement -
kadalkanni

கிச்சடி கிண்டியும், சப்பாத்தி உருட்டியும் மோடி வாக்கு சேகரிப்பு

பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள குருத்வாராவுக்கு சென்ற பிரதமர் மோடி கிச்சடி கிண்டியும் சப்பாத்தி உருட்டியும் நூதன முறையில் வாக்கு சேகரித்தார்.

கிச்சடி கிண்டியும், சப்பாத்தி உருட்டியும் மோடி வாக்கு சேகரிப்பு

பீகாரில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. தேர்தல் பிரச்சாரத்திற்காக பீகார் சென்றுள்ள பிரதமர் மோடி பாட்னாவில் உள்ள குருத்வாராவுக்கு காவி நிறத்தில் சீக்கியர்களின் தலைப்பாகை அணிந்து சென்று வழிபாடு நடத்தினார்.

பின்னர் குருத்வாராவில் உள்ள சேவை மையத்திற்கு சென்ற மோடி உணவு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தவர்களோடு இணைந்து கிச்சடி கிண்டும் பணியில் ஈடுபட்டார்.

கிச்சடி கிண்டியும், சப்பாத்தி உருட்டியும் மோடி வாக்கு சேகரிப்பு

மேலும் சப்பாத்தி மாவு உருட்டிய மோடி உணவுப் பொருட்களை எடுத்துச் சென்று அங்கிருந்தவர்களுக்கு பரிமாறினார். தொடர்ந்து குருத்வாராவுக்கு வந்திருந்த மக்களிடம் வாக்கு சேகரிப்பிலும் பிரதமர் நரேந்திர மோடி ஈடுபட்டார்.

MUST READ