Homeசெய்திகள்அரசியல்‘இந்து- முஸ்லீம் மோதல் வேண்டாம்...’அம்பேத்கர் பிரச்சனைக்கு அணை போடுகிறாரா மோகன் பகவத்..?

‘இந்து- முஸ்லீம் மோதல் வேண்டாம்…’அம்பேத்கர் பிரச்சனைக்கு அணை போடுகிறாரா மோகன் பகவத்..?

-

- Advertisement -

இப்போதெல்லாம், ஒவ்வொரு நாளும் ஒரு மசூதி, தர்காவின் கீழ் இருந்து சிலைகள் கிடைப்பதாக கூறுகின்றனர். உடனே சில இந்து முன்னணியினர் அந்த மசூதி, தர்காவை தோண்டி எடுக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்கிறார்கள். நீதிமன்றமும் உத்தரவு பிறப்பிக்கிறது.

இதனால் அந்த பகுதிகளில் அமைதி சீர்குலைந்து பரபரப்பு ஏற்படுகிறது. குறிப்பாக உத்தரபிரதேசத்தில் இதுபோன்ற சூழல் தற்போது அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்துவது காவல்துறை, அந்தப்பகுதி அரசு நிர்வாகத்தின் கடமை. ஆனால், அவர்கள் மௌனம் சாதிக்கின்றனர். இந்த அலட்சியப் போக்கைக் கண்டு ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் இதுபோன்ற நடவடிக்கைகளுக்காக வருத்தம் தெரிவித்துள்ளார். சில புதிய இந்து தலைவர்களின் நடவடிக்கைகள் நாட்டிற்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும் என அவர் எச்சரித்துள்ளார்.

கடந்த வியாழன் அன்று முதல் புனேயில் நடைபெற்று வரும் இந்து சத்பவ்னா நிகழ்ச்சியில் பேசிய அவர், தேவையற்ற இந்து-முஸ்லிம் மோதலை உருவாக்குவதை இந்து என்று கூறிக்கொள்ளும் சிலர் தவிர்க்க வேண்டும். இந்துக்கள் தங்கள் பாரம்பரியத்தால் தாராளமாகவும் சகிப்புத்தன்மையுடனும் உள்ளனர். இப்போது நம் பாரம்பரியத்திற்கு தீங்கு விளைவிக்கும் எந்த ஒரு சர்ச்சையையும் உருவாக்கக்கூடாது’’ என்று அவர் தெரிவித்டுள்ளது இந்து அமைப்புகள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

ஒவ்வொரு மசூதியின் கீழும் ஒரு கோவில் இருக்கிறது என்று விதாண்டவம் பேசுபவர்கள் தங்களது பிரச்சாரத்தை பகவத் அழிப்பதாக உணர்கிறார்கள். ஆனால் இது போன்ற செயல்களால் இந்து சமுதாயம் எவ்வளவு காலம் தன் பலத்தை தக்க வைத்துக் கொள்ள முடியும் என்பதும் கேள்விக்குறியே. இந்துக்கள் உலகில் தங்கள் நல்லெண்ணப் பிம்பத்தைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும். அவர்கள் நிதானத்தைக் கடைப்பிடிப்பது அவசியம் என்றும் பகவத் தெளிவுபடுத்தியுள்ளார்.

முகலாய ஔரங்கசீப் எதேச்சதிகாரமாக ஆட்சி செய்தாலும், அவரது வழித்தோன்றல் பேரரசர் பகதூர் ஷா ஜாபர் பசுவதைக்கு தடை விதித்தார். இங்கு இதுவரை யாரும் அந்நியராக கருதப்படவில்லை. இதுவே இந்துக்களின் சிறப்பு’’ என்று மோகன் பகவத் பேசியது விவாதப் பொருளாகவே மாறியுள்ளது. இந்துத் தலைவர் மோகன் பகவத் இப்ப்டி பேசலாமா? என இந்து மதத்தில் உள்ள பலர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஆனால் இந்து பாரம்பரியத்தின் வரலாற்றை ஆழமாகப் புரிந்து கொண்டால், இந்து சமுதாயம் எந்த மதத்தவர் மீதும் பாரபட்சம் காட்டியதில்லை. இந்து மதத்தின் இந்த பாரம்பரியம் பேணப்பட வேண்டும் என்கிறார் பகவத்.

இப்போதெல்லாம் ஒவ்வொரு நாளும் சில புதிய சர்ச்சைகள் முன்வைக்கப்படுகின்றன. இது சரியல்ல. இதுபோன்ற சர்ச்சைகளை உருவாக்குவதன் மூலம் தாங்கள் இந்துக்களின் தலைவர்களாக மாறுவார்கள் என்று சிலர் நினைக்கிறார்கள். இது முற்றிலும் தவறானது. அயோத்தியில் ராமர் கோவில் விவகாரம் வேறு. கோடிக்கணக்கான இந்துக்களின் உணர்வுகளும், பக்தியும் அந்தக் கோவிலின் மீது ஒட்டிக்கொண்டது. இப்போது அது கட்டப்பட்டுள்ளது.

எனவே இப்போது கோயில், மசூதி தகராறு எதுவும் உருவாக்கப்படக்கூடாது. நாம் ஒன்றாக வாழ முடியும் என்பதை இந்தியா இப்போது காட்ட வேண்டும். எப்படியிருந்தாலும், நாங்கள் பல ஆண்டுகளாக ஒன்றாக வாழ்கிறோம். அண்மைக்காலமாக பல பள்ளிவாசல்களின் கீழ் கோவில்களின் எச்சங்கள் காணப்படுவதாகவும் சிலர் இது தொடர்பாக நீதிமன்றத்திற்கு செல்வதாகவும் கூறப்படுகின்றது. இதன் மூலம் ஹிந்து தலைவர்களாக வருவோம் என்று நினைப்பவர்களின் சிந்தனை சரியில்லை’’ என்று அவர் எச்சரித்துள்ளார்.

MUST READ