Homeசெய்திகள்அரசியல்பெரியாரை ஏற்றுக்கொள்ளும் என்னுடைய தம்பிகள் என்னை விட்டு விலகிச் செல்லலாம்- சீமான் ஆணவம்..!

பெரியாரை ஏற்றுக்கொள்ளும் என்னுடைய தம்பிகள் என்னை விட்டு விலகிச் செல்லலாம்- சீமான் ஆணவம்..!

-

- Advertisement -

பெரியார் குறித்து சீமான் பேசிய சர்ச்சை கருத்துக்கள் ஏற்கனவே தமிழகத்தில் பரபரப்பை கிளப்பி வரும் நிலையில், பிரபாகரனே பெரியாரை ஏற்றுக் கொண்டாலும் நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்றும் பெரியாரை ஏற்றுக்கொள்ளும் நாம் தமிழர் கட்சியினர் கட்சியை விட்டு விலகலாம் என்றும் பேசி இருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.

தந்தை பெரியார் குறித்து அவதூறாக பேசிய சீமான் ஈரோட்டில் பிரச்சாரம் செய்வதற்கு எதிர்ப்பு

திருச்சி விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், பிரபாகரன் உள்ளிட்ட உலகத்தில் யார் பெரியாரை ஏற்றுக் கொண்டாலும் நான் பெரியாரை ஏற்றுக்கொள்ள மாட்டேன். என்னுடைய தம்பிகளும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். பெரியாரை ஏற்றுக்கொள்ளும் என்னுடைய தம்பிகள் என்னை விட்டு விலகி செல்லலாம் என்றார்.

ஈரோடு இடைத்தேர்தலில் பாஜக வாக்குகள் அனைத்தும் நாம் தமிழர் கட்சிக்கு கிடைத்தது எனக் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாதது நாங்கள் வாங்கிய அனைத்து வாக்குகளும் நாம் தமிழர் கட்சிக்காக மக்கள் அளித்த வாக்குகள். ஆளுங்கட்சி எதிர்க்கட்சி என எல்லா கட்சிகளுமே தேர்தல்களில் வைப்புத் தொகையை இழந்துள்ளார்கள். அந்த வரலாறு தமிழகத்தில் நடந்துள்ளது.கோழைதான் கூட்டத்தோட நிப்பான்… நான் தனியாதான் நிப்பேன். நான் புலி… நாய், நரி இல்ல நான்” எனத் தெரிவித்துள்ளார்.

பெரியார் குறித்து சீமானின் கருத்து கொஞ்சம் ஓவராக போய்விட்டதாக அண்ணாமலைக் கூறிய கருத்துக்கு இப்பொழுது தான் தொடங்கியுள்ளேன். இன்னும் போகப்போக நிறைய உள்ளது” எனத் தெரிவித்தார்.

MUST READ