நடிகை விஜயலட்சுமியின் சகோதரி மரணப் படுக்கையில் இருந்து கொண்டு, ‘என் தங்கச்சியை சீமான் ஏமாத்திட்டான்’ என கண்ணீர் மல்கக் கூறியது பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்தில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த சீமானிடம், ‘பெண்கள் குறித்து பேசும் போது தலைவர்கள் கண்ணியமாக பேச வேண்டும்’ என்று பிற அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த சீமான், “எது கண்ணியமான பேச்சு என்று நீங்கள் சொல்லுங்கள்? என்னை பாலியல் குற்றவாளி என்று எப்படிச் சொல்லுவீர்கள்?’’ என்ற கேள்வி கேட்ட சீமான், புகார் கொடுத்த நடிகையை பாலியல் தொழிலாளி என்று குறிப்பிட்டதோடு அதற்கான ஆதாரம் தன்னிடம் இருப்பதாகவும் கூறினார். ‘‘அவர்தான் பெண், எங்கள் வீட்டில் எல்லாம் பெண்கள் இல்லையா? எங்கள் மனது காயப்படாதா?” என்று ஆவேசமாக பேசியிருந்தார்.
இந்நிலையில் நடிகை விஜயலட்சுமி கண்ணீருடன் பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், ‘‘நான் என்ன பாலியல் தொழிலாளியா சீமான்? என்னை பாலியல் தொழிலாளி என்று சொல்லி இருக்கிறாய்… நான் பாலியல் தொழிலாளியாக இருந்தால் எதற்காக பெங்களூரில் என்னுடைய அக்காவுடன் கஷ்டப்படப் போகிறேன்?
இந்த நாள் வரை நீ தப்பித்து இருக்கலாம். ஆனால் இனிமேல் நீ தப்பிக்கவே முடியாது. என்னுடைய கண்ணீரை உன்னை என்ன செய்யப்போகிறது என்பதை மட்டும் நீ பார். என்னுடைய கண்ணீர் உன்னை சும்மா விடாது” என்று ஆவேசமாகப் பேசியிருந்தார்.
நடிகை விஜயலட்சுமியின் அக்கா உடல்நிலை மோசமாக உள்ளதால், மருத்துவமனையில் தீவிரசிகிச்சைப் பிரிவில் உள்ளார். தற்போது நடிகை விஜயலட்சுமியின் அக்கா ஒரு செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டி பலருக்கும் அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. அந்த பேட்டியில் நடிகை பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது அவரது இருக்கும் அக்காவை படுக்க வைக்கப்பட்ட அறைக்கு செல்கிறார்கள். நடிகையின் அக்கா படுத்தபடுக்கையாக இருக்கிறார்.
சீமான் குறித்து அவரிடம் கேட்டபோது, சீமானைத் தெரியும் எனவும், எனது தங்கையை திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றி விட்டான் என்றும் கூறினார். சீமானை பார்க்க வேண்டுமா என்ற கேள்விக்கு வேண்டாம் என அழுது கொண்டு தனது கவலையை வெளிப்படுத்தி உள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
இந்த வீடியோவைப் பார்த்த இணையவாசிகள், திமுகவினர், தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்தவர்கள் என பலரும் சீமான் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள்.