விருதுநகர் மக்களவைத் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வாய்ப்பில்லை என்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மக்களவைத் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் 3,85,256 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். தேமுதிக சார்பில் போட்டியிட்ட விஜயபிரபாகரன் 3,80,877 வாக்குகளை பெற்று 4,379 வாக்குகள் வித்தியாசத்தில் மாணிக்கம் தாகூரிடம் தோல்வி அடைந்தார்.
இந்நிலையில் மறுவாக்கு எண்ணிக்கை செய்ய வேண்டும் என டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்திடம் விஜய பிரபாகரன் மனு அளித்திருந்தார்.
இந்நிலையில் மனு தொடர்பாக தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. அதில் விரிவான தேர்தல் முடிவுகள் குடியரசு தலைவரிடம் தாக்கல் செய்யப்பட்டு விட்டதால் தேர்தல் தொடர்பான ஆவணங்களை மீண்டும் எடுக்க முடியாது என்றும் தேர்தல் ஆணையம் விரும்பினாலும் மறுவாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிட முடியாது எனவும் கூறப்பட்டுள்ளது.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் – நாதக வேட்பாளராக மருத்துவர் அபிநயா நியமனம் (apcnewstamil.com)
மேலும் மறுவாக்கு எண்ணிக்கை வேண்டும் என தோல்வியடைந்த வேட்பாளர் விரும்பினால் நீதிமன்ற மூலம் மட்டுமே தீர்வு தேடிக் கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.