Homeசெய்திகள்அரசியல்திமுக அரசால் முடியாதென்பது ஏதுமில்லை - தங்கம் தென்னரசு

திமுக அரசால் முடியாதென்பது ஏதுமில்லை – தங்கம் தென்னரசு

-

நிதியமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர் சந்திப்பு

திமுக அரசால் முடியாதென்பது ஏதுமில்லை.ஆட்சிக்கு வந்த போது கடும் நிதி நெருக்கடியிலும் கொரோனா நிவாரணமாக குடும்ப அட்டைக்கு ₹4000 வழங்கப்பட்டது.மகளிர் இலவசமாக பயணம் செய்யும் வகையில் மகளிருக்கு கட்டணமில்லா பயணம் உள்ளிட்ட பயன்தரும் பல திட்டங்களை திமுக அரசு நிறைவேற்றியது.

திமுக அரசால் முடியாதென்பது ஏதுமில்லை - தங்கம் தென்னரசு

 

ஒருபோதும் திமுக அரசால் செய்ய முடியாது என சிலரால் கூறப்பட்ட மகளிர் உதவித்தொகை திட்டத்தில் 1.15 கோடி மகளிர் மாதந்தோறும் ₹1000 பெறுகின்றனர்.மத்திய அரசு மாநில அரசிற்கு உதவாத நிலையிலும் நிவாரண தொகையை வழங்காத சூழ்நிலையிலும் மக்கள் நலனை எண்ணி திமுக அரசு தற்போது கூட பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ₹1000 வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.இது போன்ற பல திட்டங்களை மக்களுக்காக திமுக அரசு தொடர்ந்து சிறப்பான முறையில் செயல்படுத்தி கொண்டிருக்கிறது. மக்களுக்கான அரசாக திமுக அரசு திகழ்கிறது.

MUST READ