Homeசெய்திகள்அரசியல்ஜெயலலிதா இல்லாத அதிமுக வெற்றிடம் என்று ரஜினிகாந்த் கருத்தை இப்போது ஏற்கிறேன்-புகழேந்தி

ஜெயலலிதா இல்லாத அதிமுக வெற்றிடம் என்று ரஜினிகாந்த் கருத்தை இப்போது ஏற்கிறேன்-புகழேந்தி

-

- Advertisement -

ஜெயலலிதா இல்லாமல் அதிமுக ஒன்னும் இல்லாம போச்சு என ரஜினிகாந்த் தெரிவித்தார்;அதை இப்போது ஏற்கிறேன்-புகழேந்தி 

2016ல் ஜெயலலிதா அம்மா இறந்தபோது அதிமுக வெற்றிடம் என ரஜினிகாந்த் சொல்லியிருந்தார். அப்போது அதனை எதிர்த்தேன் இப்போது மனப்பூர்வமாக அதனை ஏற்றுக்கொள்கிறேன் என அதிமுக ஒருங்கிணைப்பு குழு புகழேந்தி  கூறியுள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 8ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மலர் வளையம் வைத்து, மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார்.

ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின்னர் அதிமுக ஒருங்கிணைப்பு குழு புகழேந்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசியதாவது,

”ஜெயலலிதா உயிரோடு இருந்து கட்சியை வழிநடத்தி இருந்தால் அதிமுக இப்படி ஒரு நிலைக்கு தள்ளப்பட்டு இருக்காது. அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் அனைவரும் ஒன்றிணைைய வேண்டும் என நினைக்கிறோம். ஆனால் எடப்பாடி ஒத்துழைப்பை தர மறுக்கிறார். அனைவரும் சேர்வதற்கு முன்பு எடப்பாடி தவிர மீதமிருக்கும் அணிகள் இணைய வேண்டும். இந்த இயக்கம் ஒன்றிணையவில்லை என்றால் இந்த இயக்கம் பாதாள கிணருக்கு போய்விடும்.

நடிகர் விஜயின் வரவு மற்றவர்களின் அரசியலில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது களப்பணிகளில் முதலமைச்சர் சுழன்று வருகிறார். அதற்கு தமிழக அரசை பாராட்டுகிறேன். அதிமுக பிறிந்திருப்பதால் திமுக பலமாக இருக்கிறது. தற்போது விஜய் அரசியலுக்கு வந்திருக்கிறார். எவ்வளவு சொன்னாலும் எடப்பாடி பழனிசாமி திருந்த மறுக்கிறார்.

ஒன்றிணைகவில்லை என்றால் கழகம் மோசமான நிலைக்கு போய்விடும். இப்படியே இருந்தால் 2026ல் 26 சீட்டுக்களைக்கூட வெல்ல முடியாது. எடப்பாடி திருந்தாவிட்டால் இயக்கம் ஒன்றும் இல்லாமல் போய்விடும். ஜெயலலிதா அம்மா இறந்தபோது அதிமுக வெற்றிடம் என ரஜினிகாந்த் சொல்லியிருந்தார். அப்போது அதனை எதிர்த்தேன் இப்போது மனப்பூர்வமாக அதனை ஏற்றுக்கொள்கிறேன். ஜெயலலிதா இல்லாமல் அதிமுக வெற்றிடமாக இருக்கிறது. சசிகலா நான்கு ஐந்து வருடங்களாக கட்சியை ஒன்றிணைப்பதாக பேசி வருகிறார்.

எடப்பாடி பழனிச்சாமி தானாக திருந்தாவிட்டால் மக்கள் அவரை திருத்த நேரிடும் என்றார்.

ஃபெஞ்சல் புயல் நிவாரண நிதி: ஒரு மாத ஊதியத்தை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

MUST READ