- Advertisement -
கொங்கு மண்டலத்தில் மாநாடு நடத்த ஓபிஎஸ் திட்டம்
திருச்சியை அடுத்து கொங்கு மண்டலத்தில் மாநாடு நடத்த ஓ.பன்னீர்செல்வம் அணியினர் திட்டமிட்டுள்ளனர்.
மாநாடு நடத்துவது தொடர்பாக சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் தனது ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனையில் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜேசிடி பிரபாகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த மாதத்துக்குள் மாநாடு நடத்தவும், மாநாடு முடிந்த பிறகு மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொள்ளவும் ஓபிஎஸ் அணி திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து ஓ.பன்னீர்செல்வம் கூறுகையில், “திருச்சி மாநாடு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்தது. திருச்சி மாநாட்டுக்கு அதிகம் பேர் திரண்டதால் அரசியல் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படுகின்றன. திருச்சி மாநாட்டை விட பிரமாண்டமாக கொங்கு மண்டலத்தில் மாநாடு நடத்தப்படும்.” எனக் கூறினார்.