Homeசெய்திகள்அரசியல்ஓபிஎஸ்ஸின் மேல்முறையீட்டு வழக்கு இன்று விசாரணை

ஓபிஎஸ்ஸின் மேல்முறையீட்டு வழக்கு இன்று விசாரணை

-

- Advertisement -
ஓபிஎஸ்ஸின் மேல்முறையீட்டு வழக்கு இன்று விசாரணை
அதிமுக பொது குழு குறித்த தனி நீதிபதியின் தீர்ப்புக்கு தடை விதிக்க கோரி ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

ஓபிஎஸ்

2022 ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என்ற தீர்ப்புக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் இரு நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர்.

பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி செயல்பட தடை விதிக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது. மேலும் தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.

ஓபிஎஸ்

இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்த போது இதே கோரிக்கை தொடர்பாக மனோஜ் பாண்டியன், வைத்தியலிங்கம், ஜேசிடி பிரபாகர் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்கள் விசாரணைக்கு பட்டியலிடப்படவில்லை என்று ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.

இதை எடுத்து அனைத்து மனுக்களும் இன்று விசாரணைக்கு வருகிறது.

MUST READ