Homeசெய்திகள்அரசியல்கள்ளச்சாராய விவகாரம் - பழனிசாமி உண்ணாவிரதப் போராட்டம்

கள்ளச்சாராய விவகாரம் – பழனிசாமி உண்ணாவிரதப் போராட்டம்

-

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக நீதி கோரி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

கள்ளச்சாராய விவகாரம் - பழனிசாமி உண்ணாவிரதப் போராட்டம்

சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்த  உண்ணாவிரதப் போராட்டம் மாலை 5 மணி வரை நடைபெற்றது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், வேலுமணி, செங்கோட்டையன், ஆர்பி உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன், கே.பி.முனுசாமி, பொள்ளாச்சி ஜெயராமன், தங்கமணி ஆகியோர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் நேரில் ஆதரவு தெரிவித்துள்ளார்.

அதனை தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அனைத்து சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மாவட்ட செயலாளர் அனைவரும் கலந்து கொண்டு உள்ளனர். இன்று வரை 63 பேர் உயிரிழந்து உள்ளனர். மேலும் பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பலர் உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும் பலர் கண் பார்வை இழந்து இருக்கிறார்கள்.

கள்ளச்சாராய விவகாரம் - பழனிசாமி உண்ணாவிரதப் போராட்டம்

இன்றைக்கு கள்ளக்குறிச்சி கள்ளசாராய சம்பவம் இந்திய அளவில் பேசும் பொருள் ஆகி உள்ளது. நாம் தமிழர் கட்சி சார்பில் ஒருகினைபாளர் சீமான் அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர். இச்சம்பவம் நடந்த பின்பு நேரடியாக இடத்திற்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினோம்.

சட்டமன்றத்தில் தங்களை வெளியே அனுப்பிவிட்டு முதலமைச்சர் பதில் அளித்து இருக்கிறார். கேள்வி நேரத்தின் போது முதலமைச்சர் 15 நிமிடம் பதில் அளித்துள்ளார். இது எந்த விதத்தில் நியாயம்? இந்த மூன்று ஆண்டு காலத்தில் எதிர் கட்சிக்கு வாய்ப்பு அளிக்கவில்லை என்றும் தங்கள் ஆட்சியில் அனைவருக்கும் வாய்ப்பு வழங்கி இருக்கிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி விவகாரம் : அதிமுகவினர் உண்ணாவிரத போராட்டம்; பிரேமலதா நேரில் ஆதரவு (apcnewstamil.com)

15 நிமிடத்தில் எப்படி ஒரு நாளைக்கு 3 துறை சார்ந்த கோரிக்கை நடைபெறுகிறது? இந்த நேரத்தில் எப்படி பேச முடியும் என்றார். 19 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பேட்டி கொடுக்கிறார். அன்று கள்ளச்சாராயம் குடித்து இறந்து விட்டதாக பேட்டி அளித்து இருக்கிறது.

ஒரு வாரமாக மானிய கோரிக்கை நடைபெற்று வருகின்றன. ஆனால் 20 ஆம் தேதி சட்டமன்ற கூட்டம் ஒத்திவைக்கபட்டது. இந்த செய்தியை தவறாக வெளியிட்டால் நடவடிக்கை எடுக்க படும் என்று மாவட்ட ஆட்சியர் வெளிப்படையாக தெரிவித்து இருக்கிறார். இதற்கு முழு பொறுப்பு அரசாங்கம் தான்.

இந்த சம்பவம் குறித்து பேசினால் எதிர்க்கட்சியினர் குரலை நசுகின்றன. நாங்கள் எப்போது மக்களுக்காக பாடுபடுகிறது. அட்சியம் என்பது அதிமுகவில் இல்லை என்றார்.

சீமானுக்கு வாழ்த்துகள்.. 2026ல் ஆட்சி மாற்றம் உறுதி – பிரேமலதா விஜயகாந்த் (apcnewstamil.com)

நான் எதையும் கண்டு அஞ்சுவது கிடையாது பதுகியதும் இல்லை என்று
அமைச்சர் ஒருவர் கூறுகிறார். அதிமுக உள்ளே இருந்தால் கிழி கிழி நு கிழித்து இருப்போம் என்று கூறுகிறார். பேப்பர் மட்டும் தான் உங்களால் கிழிக்க முடியும் என்றார்.

நான் சம்பவ இடத்தில் நேரில் சென்ற பிறகு தான் அவசரமாக Omeprazole endra மருந்தை கொண்டு வந்தனர். ஆட்சி அதிகாரத்தில் பேசுகிறார்கள். அதிமுகவுக்கு காலம் வரும். முதல்வர் 40 க்கு 40 திமுக வெற்றி பெற்றதால் அதிமுக தாங்கி கொள்ள முடியாமல் பேசுகிறது என சொல்கிறார். எதிர்கட்சி அரசியல் செய்யாமல் அவியலா செய்ய முடியும் ?

எதிர் கட்சியை அடக்கி ஒடுக்கி இந்த விவகாரத்தை மறைக்க பார்க்கிறது. அரசு
மக்கள் மன்றத்தில் சந்தித்து. இந்த விவகாரத்தை அறவழி போராட்டத்தை நடத்தி வருகிறோம்.

விஷச்சாராய விவகாரம்: 10 பேர் 6 நாட்கள் கஸ்டடி (apcnewstamil.com)

உண்மை குற்றவாளி தண்டிக்க பட வேண்டும். திமுக ஆட்சியில் அமர்ந்து மூன்று ஆண்டுகள் வரையில் இன்றைக்கு கருத்து சுதந்திரம் பறிக்கப்பட்டு இருக்கிறது.
சட்டபேரவை தலைவர் நடுநிலையோடு செயல்படவேண்டும். சீமான் தங்களது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தது நன்றி கூறுகிறேன்.

கள்ளச்சாராய விவகாரம் - பழனிசாமி உண்ணாவிரதப் போராட்டம்

பிறகு உண்ணாவிரத போராட்டத்தை அதிமுக அவைத் தலைவர் தமிழ் மகன் ஹுசேன் எடப்பாடி பழனிச்சாமிக்கு பழசாரு கொடுத்து முடித்து வைத்தனர்.

MUST READ