Homeசெய்திகள்அரசியல்பெண்கள் பாதுகாப்பு இன்மை தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் - எம்.பி தம்பிதுரை வலியுறுத்தல்

பெண்கள் பாதுகாப்பு இன்மை தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் – எம்.பி தம்பிதுரை வலியுறுத்தல்

-

- Advertisement -

நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள பெண்கள் பாதுகாப்பு இன்மை தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று மாநிலங்களவை அ.தி.மு.க எம்.பி தம்பிதுரை வலியுறுத்தியுள்ளார்

பெண்கள் பாதுகாப்பு இன்மை தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் - எம்.பி தம்பிதுரை வலியுறுத்தல்நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடர்பாக நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்து கொண்ட அ.தி.மு.க எம்.பி. தம்பிதுரை டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்,  இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தொடர்ச்சியாக தாக்கப்படுகிறார்கள், இந்த பிரச்சனையை தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அது தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என  வலியுறுத்தியதாக தெரிவித்த தம்பிதுரை தமிழகத்தில் மீனவ சமுதாய மக்களை பழங்குடி பிரிவில் சேர்க்க வேண்டும் என்பது தொடர்பாகவும்  நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என்றும் நாடு முழுவதும் பெண்கள் பாதுகாப்பு தொடர்பாகவும , போதை பொருள் விவகாரம் தொடர்பாகவும் நாடாளுமன்றத்தில் விவாத நடத்த வேண்டும்.

வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா அவசர அவசரமாக இறுதி செய்தது தவறு, அதனை இறுதி செய்ய இன்னமும் கால அவகாசம் கொடுத்திருக்க வேண்டும். அவசர அவசரமாக வக்பு வாரிய மசோதாவை மீண்டும் தாக்கல் செய்வதை அ.தி.மு.க ஆதரிக்கவில்லை.

வக்பு வாரிய மசோதா நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு வரும்போது கட்சி தலைமையின் ஆலோசனையின் படி நிலைப்பாட்டை எடுப்போம். டங்ஸ்டன் திட்டம் வரக்கூடாது என்பது தான் அ.தி.மு.க.வின் திட்டம் என்றும் தம்பி துரை தெரிவித்தார்.

MUST READ