Homeசெய்திகள்அரசியல்'பென்' கொடுத்த ரிப்போர்ட்… களையெடுக்கப்படும் திமுக மாவட்டச் செயலாளர்கள்..!

‘பென்’ கொடுத்த ரிப்போர்ட்… களையெடுக்கப்படும் திமுக மாவட்டச் செயலாளர்கள்..!

-

- Advertisement -

கடந்த சில நாட்களாக தி.மு.க.வில் மாவட்டச் செயலாளர்கள் மாற்றம் நடைபெற்று வருகிறது. உளவுத்துறையும், சபரீசனின் ‘பென்’ அமைப்பும் கொடுத்த ரிப்போர்ட்டின் அடிப்படையில்தான் மாற்றங்கள் நடந்து வருகிறது என்கிறார்கள் அறிவாலய வட்டாரத்தில்…

ஈரோடு மாவட்டம் பெருந்​துறையைச்​சேர்ந்த தோப்பு வெங்​கடாசலம் அதிமுக ஆட்சி​யில் அமைச்​சராகப் பதவி வகித்​தார். இருக்கும் இடத்தில் விசுவாசமாக இருக்கக்கூடியவர். இவர் அ.தி.மு.க.வில் இருந்து தி.மு.க.வில் இணைந்து மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக பதவியை எதிர்பார்க்காமல் கட்சியைப் பணியை ஆற்றியதால் ஈரோடு மத்திய மாவட்டச் செயலாளர் பதவியை கொடுத்திருக்கிறது தி.மு.க. தலைமை.

தி.மு.க.வில் உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்டின் அடிப்படையில்தான் தோப்பு வெங்கடாச்சலம், விழுப்புரம் லட்சுமணன் உள்ளிட்டவர்களுக்கு பதவி கொடுத்திருப்பதாக தவல்கள் வெளியாகியிருக்கிறது. இது பற்றி அறிவாலய வட்டாரத்தில் பேசினோம்.

‘‘கொங்கு மண்டலமான ஈரோடு மாவட்டத்தை தி.மு.க.வின் கோட்டையாக மாற்ற தலைமை விரும்பியது. அதற்காகத்தான், அப்பகுதியில் செல்வாக்காக இருக்கும் தோப்பு வெங்கடாச்சலத்திற்கு மா.செ. பதவியை வழங்கியிருக்கிறது தி-.மு.க. தலைமை. இந்தப் பதவியை தி.மு.க. தலைமை உடனடியாக கொடுத்துவிடவில்லை. பலகட்ட உளவுத்துறையின் ஆய்வுகளுக்குப் பிறகே அவருக்கு பதவி கொடுக்கப்பட்டிருக்கிறது.

காரணம், பெருந்துறை தொகுதி அ.தி.மு.க.வின் கோட்டையாகவே இதற்கு முன்பு இருந்தது. தற்போது, தோப்பு வெங்கடாச்சலம் தி.மு.க.விற்கு வந்த பிறகு பெருந்துறை தி.மு.க.வின் கோட்டையாக மாறி வருகிறது இந்தப் பின்னணியில்தான் தோப்புவிற்கு மா.செ. பதவி வழங்கப்பட்டிருக்கிறது.

தோப்பு வெங்கடாச்சலத்திற்கு மா.செ. பதவி கொடுக்கப்பட்டவுடன், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் 3 நாட்களாக வீட்டிலேயே முடங்கிக் கிடக்கிறாராம். தவிர, தோப்புவிற்கு பதவி கொடுத்தபிறகுதான், பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலையும், ‘கொங்கு வேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கே தி.மு.க.வில் பதவி கொடுக்கப்படுகிறது’ என வார்த்தையை உதிர்த்திருக்கிறார்.

அ.தி.மு.க.வில் இருந்து தோப்பு வெங்கடாச்சலம் வந்திருந்தாலும், தி.மு.க.வில் உள்ள அனைத்து நிர்வாகிகளையும் அரவணைத்துச் செல்கிறார். தவிர, அ.தி.மு.க.வில் உள்ள சில நிர்வாகிகளும் ‘தோப்பு’ தலைமையில் விரைவில் தி.மு.க.வில் இணைய இருக்கிறார்களாம்.

இதே போல்தான், விழுப்புரத்திலும் பொன்முடியின் எதிர்ப்பை மீறி லட்சுமணனுக்கு மாவட்டச் செயலாளர் பாவி கொடுக்கப்பட்டிருக்கிறது. இதுவும் உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட் அடிப்படையில் பதவி கொடுக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளராக இருந்த செந்தில் பாலாஜியின் ஆதரவாளர் மதுரா செந்தில் நீக்கப்பட்டு மீண்டும் கே.எஸ்.மூர்த்தியை மாவட்டச் செயலாளராக நியமித்துள்ளது திமுக தலைமை. இன்னும் சில மாவட்டங்களிலும் மாற்றம் இருக்கும்’’ என்கிறார்கள்.

MUST READ