சென்னையின் வளர்ச்சி திட்டங்களை பார்வையிட்ட அமைச்சர் சேகர்பாபு. திராவிட மாடல் ஆட்சி ,மாற்றத்திற்கு உண்டான ஆட்சி ,வட சென்னை வாடா சென்னை ஆக மாறும். அரசியலையும், ஆன்மீகத்தை சம்பந்தப்படுத்தி அரசியல் ரீதியாக பேசும் அண்ணாமலைக்கு திருப்பதிக்கு நிகராக பழனி இருப்பதை நிரூபித்த காட்ட தயார் என்றும். இறுதி தேர்தல் 2026 ஆம் ஆண்டு மக்களுடைய முதல்வர் தமிழக முதலமைச்சர் மக்கள் மீண்டும் தேர்ந்தெடுக்க தயாராகி விட்டார்கள் தேர்தல் எப்போது என்று தான் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரிவித்தார்.சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதியான காசிமேடு கடற்கரை அருகே உள்ள புதுமனை குப்பம் சிங்காரவேலன் நகரில் வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ், தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரிய புதிய குடியிருப்புகள் அமைப்பது தொடர்பான கள ஆய்வை அமைச்சர் சேகர்பாபு நேரில் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை கூடுதல் தலைமை செயலளார் காகர்லா உஷா உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் உடன் இருந்தனர். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு .
பின்னர் செய்தியாளர்கள் சந்தியில் கூறியிருப்பதாவது – இறுதி தேர்தல் 2026 ஆம் ஆண்டு மக்கள் மீண்டும் தமிழக முதல்வரை தேர்ந்தெடுக்க தயாராகி விட்டார்கள் தேர்தல் எப்போது என்று தான் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அதனை தொடர்ந்து வால்டாக்ஸ் சாலை, அண்ணா பிள்ளை தெருவில், சிஎம்டிஏ சார்பில் மேம்படுத்தப்பட்டு வரும் விளையாட்டு மைதானம் மற்றும் வால்டாக்ஸ் சாலை தண்ணீர் தொட்டி தெருவில் சென்னைப் பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பாக கட்டப்பட்டு வரும் இரத்த சுத்திகரிப்பு மையம் மற்றும் அதே பகுதிகளில் சென்னைப் பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பாக கட்டப்பட்டு வரும் 700 புதிய குடியிருப்புகள் ஆகியவற்றை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொள்ள இருப்பதாக கூறினாா்.
திராவிட மாடல் ஆட்சி மாற்றத்திற்கு உண்டான ஆட்சி வட சென்னை வாடா சென்னை ஆக மாற்றுவதற்கு தமிழக முதல்வர் மேற்கொண்ட பயணம் முதலில் ஆயிரம் கோடி என்று வட சென்னை வளர்ச்சி நிதி என்று அறிவித்தார். அதற்கு பிறகு கடந்த ஆண்டு மார்ச் மாதம் 14ஆம் தேதி, 2047 கோடி, இரண்டாவது கட்டமாக அறிவித்தார். அது ஆள் போல் தழைத்து அருகு போல் பெருத்து இன்றைக்கு 6,309 கோடி பெருகி இருக்கின்றது. மேலும் கூடுதல் தொகையோடு வடசென்னை வளர்ச்சி திட்டம் பயணிக்கும் என்பதில் ஐயம் இல்லை.
தென் சென்னை மத்திய சென்னைக்கு இணையாக வடசென்னை வளம் பெற இருக்கிறது. வடசென்னை வளர்ச்சி சென்னையாக முதல்வர் மாற்றுவார் என வடசென்னை பகுதி மக்கள் மனதார குலமாற நம்புகிறார்கள். அண்ணாமலை முருகனுக்கு காவடி எடுத்துள்ளார் அதனை விமர்சனம் செய்வதற்கு தயாராக இல்லை. அவர் ஏற்கனவே சொன்னது நேர்த்திக்கடன் 48 நாட்கள் செருப்பு அணிய மாட்டேன் என்றார். அரசியலையும் ஆன்மீகத்தை சம்பந்தப்படுத்தி அரசியல் ரீதியாக பேசும் அண்ணாமலைக்கு திருப்பதிக்கு நிகராக பழனி இருப்பதை நிரூபித்த காட்ட தயார்.
இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகுதான் பழனி முருகன் கோவில் குடமுழுக்கு நடைபெற்றது. 98 கோடி ரூபாய் செலவில் வளர்ச்சி திட்டம் பழனியில் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. தமிழக முதல்வர் வந்த பிறகுதான் அரசாணை செயல்படுத்தி கருவூலத்திற்கு 58 கோடி ரூபாய் செலுத்தி இரண்டாவது மாஸ்டர் பிளான் விரைவு திட்டத்தை தொடங்கியுள்ளார். பழனிக்கு நான் வேண்டுமென்றால் அழைத்துச் செல்கிறேன் என்னுடன் வந்து பாருங்கள். திருப்பதிக்கு நிகராக பழனி இல்லை என்றால் நீங்கள் என்ன கூறினாலும் நான் ஏற்றுக்கொள்வேன்.
பழனி தைப்பூசத்திற்கு ஒரு நாளைக்கு 20 ஆயிரம் பக்தர்களுக்கு 10 நாட்களுக்கு 20 லட்சம் பக்தர்களுக்கு கட்டணம் இல்லாமல் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது . இப்படி எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தப்பட்டிருக்கின்றன. பழனி முருகனுக்கு தைப்பூசத்திற்கு ஒரு நாளைக்கு இரண்டு லட்சம் பக்தர்கள் வந்துள்ளார்கள் ஆனால் எந்தவிதமான சிறு அசாம்பிவிதம் இல்லாமல் தைப்பூசம் விமர்சையாக நடந்து கொண்டிருக்கின்றது.
தைப்பூசத்திற்கு பழனியில் மட்டுமல்லாமல் அறுபடை வீடுகளான பழனி, திருச்செந்தூர், சுவாமி மலை, திருப்பரங்குன்றம், திருத்தணி உள்ளிட்ட கோவில்களில் வரலாற்றில் இல்லாத அளவிற்கு பக்தர்கள் அதிகமாக இருந்தாலும் திட்டமிடலோடு அந்த பக்தர்கள் வருகையை அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. எங்கு பார்த்தாலும் அரோகரா என்று கோஷங்களோடு மனம் நிறைந்து மகிழ்ச்சியோடு முருக பக்தர்கள் வழிபட்டதை காண முடிந்தது. மருதமலையில் 5 லட்சம் பக்தர்கள் 24 மணி நேரமும் வருகை தந்திருக்கிறார்கள் தேவையான அளவுக்கு போதிய அளவிற்கு பக்தர்களுடைய தேவைகளை நிறைவேற்றிக் கொடுக்கப்பட்டுள்ளன அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.
குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் 60 லட்சத்திற்கும் மேல் பக்தர்கள் தைப்பூசத்தில் முருகனை தரிசித்து இருக்கிறார்கள். எங்கும் எந்த விதமான சிறு அசம்பாவிதம் கூட நடைபெறவில்லை நேர்த்தியாக பக்தர்கள் முருகப்பெருமானை வழிபட்டு சென்றாா்கள். அதற்கு காரணமான அரசு திராவிட மாடல் அரசு திராவிட மாடலுடைய ஆட்சி நாயகன் தமிழக முதல்வர் என்று தெரிவித்தார். தமிழக வெற்றி கழகம் 20% வாக்கு பெற்றிருப்பதாக பிரசாந்த் கிஷோர் கூறியது. அடுத்து தேர்தல் சந்திக்கின்ற அனைவரும் எங்களுக்கு 100 சதவீதம் வாக்குகள் என்று கூறுகிறார்கள். இறுதி தேர்தல் 2026 ஆம் ஆண்டு மக்களுடைய முதல்வர் தமிழக முதலமைச்சர் மக்கள் மீண்டும் தேர்ந்தெடுக்க தயாராகி விட்டார்கள் தேர்தல் எப்போது என்று தான் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரிவித்தார்.
பறிபோகிறதா இரட்டை இலை சின்னம்..? பதற்றத்தில் எடப்பாடியார்..!