“மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம் நடத்துபவர்களை மக்களே வெகுண்டு எதிர்க்கும் நிலை தமிழகத்தில் உருவாகி விடும் என பாஜகவிற்கு எச்சரிக்க கடமைபட்டுள்ளேன்” என அமைச்சர் சேகர்பாபு.
சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் அன்னம் தரும் அமுதக்கரங்கள் நிகழ்வானது ஓட்டேரி முத்து நகர் மற்றும் சூளையில் உள்ள KM கார்டன் தெருவில் நடைபெற்றது. இதில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், சென்னை கிழக்கு மாவட்ட செயலாளருமான பி.கே.சேகர்பாபு கலந்து கொண்டு ஏழை எளிய பொதுமக்களுக்கு காலை உணவுகளை வழங்கினார். இதில் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். பின்னர் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்தாா்.
மேலும் செய்தியாளர் சந்திப்பில் கூறியிருப்பதாவது, ”மக்கள் மகிழ்ச்சியாக உணவுகளை பெற்று வருகிறார்கள். தினமும் ஆயிரம் நபர்களுக்கு உணவுகள் வழங்கப்பட்டுகிறது”.
10 மாதத்தில் திமுக ஆட்சி அகற்றப்பட்டு மும்மொழி கொள்கை தமிழகத்தின் அமல்படுத்தப்படும் என ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் கூறியது குறித்தான கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர்….
தேர்தலுக்கு ஓராண்டு உள்ளது. குறிப்பாக சொல்ல போனால் தேர்தலுக்கு இன்னும் 13 மாதம் இருக்கிறது. 10 மாதத்தில் ஆட்சிக்கு வருவோம் என்றால் எப்படி மந்திரம் மற்றும் யாகம் செய்து வர வைப்பாரா, ஜனநாயக ரீதியாக தேர்தலை எதிர்கொள்ள திமுக களத்தில் நின்று கொண்டிருக்கிறது, ஆனால் வேல்முருகனையோ அண்ணாமலையோ தொடர்பு கொண்டு பாருங்கள் அவர்கள் கிடைக்கிறாரா என்று என தெரிவித்தார்.களத்தில் ஒன்றிணைந்து மக்களோடு திமுக பயணித்து வருகிறது 200 நிச்சயம் 234 எங்கள் லட்சியம் என கூறினார்.
மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக மாணவர்களை கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்குகிறது பாஜக என்ற கேள்விக்கு, ”பாஜக ஏற்கனவே விரட்டப்பட்ட இயக்கம், மதத்தால் இனத்தால் பிரிவினையை உண்டாக்க நினைத்தவர்கள் தமிழக மண்ணில் இடமில்லை என்பதை அறிந்த பிறகு மாணவச் செல்வங்கள் இடையே இந்த சூழ்ச்சியை மேற்கொண்டு வருகிறார்கள். மோடி சென்ற இடமெல்லாம் எப்படி கோ பேக் மோடி என்றார்களோ அதுபோல் இவர்கள் சென்ற இடங்களில் எல்லாம் மும்மொழி கொள்கையை ஆதரிக்கிறவர்களுக்கு எதிர்ப்பாக கோ பேக் கோ பேக் என்ற குரல் தான் தமிழகத்தில் கேட்டுக் கொண்டிருக்கிறது ஊடக வெளிச்சத்திற்காக இரண்டு நாட்கள் சென்று இருப்பார்கள் அதன்பிறகு காணவில்லை . இந்த சூழ்நிலை தொடருமானால் மக்களே வெகுண்டு எதிர்க்கும் நிலை தமிழகத்தில் உருவாகி விடும் என பாஜகவுக்கு எச்சரிக்கை கடமைப்பட்டிருக்கிறேன்.
எப்போதெல்லாம் திமுக மீது குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகிறதோ இன்னும் 10 அடி முன்னோக்கி சென்று கொண்டிருக்கிறோம். ஆன்மீகத்துக்கு எதிரான ஆட்சி என சொன்னார்கள். ஆனால் 2,670 திருக்கோவிலுக்கு குடமுழுக்கு நடைபெற்று இருக்கிறது. 300 கோடி செலவில் கோவில்கள் புறணமைப்பு பணிகளுக்கு அரசின் சார்பாக முதலமைச்சர் வழங்கியுள்ளார். 340 கோடி ரூபாய் வைப்பு நிதியாக வைக்கப்பட்டுள்ளது. வரலாற்றில் புதிய வேகத்தில் இந்து சமய அறநிலையத்துறை பயணித்து வருகிறது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கல்வி என்பது மாநகராட்சி பள்ளியில் ஒதுக்கப்பட்ட சூழலை இருந்ததை மாற்றி கல்வித் தலங்களாக மாற்றிய பெருமை முதலமைச்சரின் வழியில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பயணம் மேற்கொண்டு இருக்கிறார். தமிழகத்தை மட்டுமல்ல ஒன்றிய அளவில் உலக அளவில் கல்வித்தரத்தை கல்வி கட்டமைப்பை பின்பற்றுகின்ற நல்ல சூழல் அமைந்திருக்கிறது. ஆன்மீகத்துக்கு எதிரான ஆயுதம் ஏந்திய போது அது துருப்பிடித்தது. கல்வித் துறைக்கு எதிராக எடுத்திருக்க ஆயுதமும் துருப்பிடிக்கும், இவ்வளவு பேசுகிற அவர்கள் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நிதியை 2000 கோடி 5000 கோடி 10,000 கோடி இழப்பு என்றார்களும் எங்களுடைய கொள்கையில் உறுதியாக இருக்கிறோம்.
கல்வியின் பாலும் தமிழகத்தின் மணவர்கள் மீது அக்கறை இருந்தால் இதை பேசுபவர்கள் சொரணை இருந்தால் ஒன்றிய அரசிடம் கேட்டு நிதியை பெற்று தர வேண்டும் முயற்சிகள் ஈடுபட வேண்டும் என தெரிவித்தார். கடல் வத்தி கருவாடு திண்ணலாம் என காத்திருத்த கொக்கு குடல் வத்தி இறந்து போகும் கதையாக தான் பாஜகவின் கனவு என தெரிவித்தார். சென்னையில் 200 வார்டு உள்ளது. ஒரு வார்டில் கவுன்சிலர் ஆகியுள்ளார்கள். கூரையேறி கோழி பிடிக்க தெரியாதவர்கள் வானத்தில் ஏறி வைகுண்டத்தை எப்படி வழி காட்ட முடியும்” என தெரிவித்தார்.