நாடு முழுவதும் மக்களவை பொதுத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது.
கடந்த ஏப்ரல் 19-ம் தேதி முதல் கட்ட தேர்தல் 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளில் நடைபெற்றது. இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 தொகுதிகளில் நடைபெற்றது.
அசாம் மாநிலத்தில் 4, பிஹார் 5, சத்தீஸ்கர் 7, தத்ரா நகர் ஹவேலி மற்றும் டாமன் டையூ யூனியன் பிரதேசங்கள் 2, கோவா 2, குஜராத் 25,கர்நாடகா 14, மத்திய பிரதேசம் 9, மகாராஷ்டிரா 11, உத்தர பிரதேசம் 10,மேற்கு வங்கம் 4 தொகுதிகளில் 3-ம் கட்ட மக்களவை தேர்தல் நாளை காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறு உள்ளது.
நாளை நடைபெறும் 3-வது கட்ட தேர்தலில் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜோதிர் ஆதித்ய சிந்தியா மற்றும் டிம்பிள் யாதவ், சிவராஜ் சிங் சவுகான், ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, திக்விஜய் சிங், சுப்ரியா சுலே என 1,352 முக்கிய வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
கடந்த சில நாட்களாக தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பொதுக் கூட்டங்கள், வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பு, ஊர்வலங்கள் என பல்வேறு கட்சித் தலைவர்கள், தொண்டர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர்.
அயோத்தியில் நேற்று மாலை நடைபெற்ற பிரம்மாண்ட ஊர்வலத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். 3-ம் கட்ட மக்களவை தேர்தலுக்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.