கரூரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, ” நம்முடைய மாவட்டத்தில் இருக்கக்கூடிய பாஜக மாநில தலைவர் ஒரு அரசியல் கோமாளி. காலையில் ஒரு பேச்சு, மதியம் ஒரு பேச்சு, மாலை ஒரு பேச்சு.. விடிந்தால் ஒரு பேச்சு என அவர் பேசி வருகிறார். நேற்று என்ன பேசினோம் என்பது இன்று தெரியாது. இன்று என்ன பேசினோம் என்பது நாளை தெரியாது. அவர் இந்தி குறித்தும் மும்மொழி கொள்கை குறித்தும் இப்போது பேசி வருகிறார்.
லண்டனில் படிக்கப்போகும்போது என்ன பேசினீர்கள் அவரிடம் நான் ஒன்றை மட்டும் கேட்க விரும்புகிறேன். லண்டனில் படிக்கச் சென்றீர்களே.. அங்கு ஆங்கிலத்தில் பேசினீர்களா இல்லை இந்தியில் பேசினீர்களா..? எந்த மொழியில் பேசினீர்கள்? ஏன் அப்போது மட்டும் ஆங்கிலத்தில் பேசினீர்கள் என்பதை நாட்டு மக்களிடம் சொல்லுங்கள். அதன் பிறகு மும்மொழி கொள்கை குறித்து நாம் பேசலாம்” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அண்ணாமலை லண்டன் பயணம் பாஜக மாநில தலைவரான அண்ணாமலை லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சர்வதேச அரசியல் குறித்துப் படிப்பை மேற்கொண்டார். இதற்காகக் கடந்த ஆகஸ்ட் மாதம் லண்டன் சென்ற அண்ணாமலை, 3 மாதங்களுக்கு பிறகே தமிழகம் திரும்பியிருந்தார். அதைக் குறிப்பிட்டே இப்போது அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார். பின்னணி புதிய கல்விக் கொள்கையில் மும்மொழி கொள்கை என்பது முக்கிய அம்சமாக இருக்கிறது.
தாய் மொழியில் பாடங்கள் கற்பிக்க வேண்டும். மேலும், கூடுதலாக ஒரு மொழியை கற்பதில் எந்தவொரு தவறும் இல்லை என்று பாஜகவினர் கூறி வருகிறார்கள். மேலும், மூன்றாவது மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்று கட்டாயம் இல்லை என்றும் மாணவர்கள் விரும்பிய மொழியை கற்கலாம் எனக் கூறி வருகிறார்கள். இருப்பினும், இதுபோன்ற திட்டம் இந்தியை மறைமுகமாகத் திணிக்கும் முயற்சி என்று திமுக தலைவர்கள் கூறி வருகிறார்கள். உலக நாடுகளுடன் தொடர்பு கொள்ள ஆங்கிலம் இருக்கும் போது மூன்றாவது மொழி கற்க வேண்டிய அவசியம் என்ன என்றும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்