- Advertisement -
கர்நாடக தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக ஓபிஎஸ் பிரச்சாரம்- புகழேந்தி
கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தல் வரும் மே 10 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் இந்த தேர்தலில் ஓபிஎஸ் அணி போட்டியிட தமிழர்கள் அதிகம் வாழும் 3 தொகுதிகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என புகழேந்தி எடியூரப்பாவை நேரில் சந்தித்து வலியுறுத்தி உள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் வாழும் 1 கோடி தமிழர்களின் தலைநகர் என்று கருதப்படும் கே ஜி எப், பெங்களூருவில் தமிழர்கள் அதிகம் வாழும் சிவாஜி நகர், சாந்தி நகர் ஆகிய மூன்று தொகுதிகள் தற்பொழுது காங்கிரஸ் வசம் உள்ளது. இந்த தொகுதிகளில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என ஓபிஎஸ் அணி சார்பில் புகழேந்தி எடியூரப்பாவை நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளார். மேலும் இது குறித்து பாஜக கர்நாடக மாநில தலைவர் நலின் குமார் கட்டில் மற்றும் முதல்வர் பசவராஜ் பொம்மை ஆகியோரையும் நேரில் சந்தித்து வலியுறுத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பாஜக அழைப்பு விடுத்தால் ஓபிஎஸ் கண்டிப்பாக கர்நாடக சட்டமன்ற தேர்தலில் தமிழர்கள் இடையே பிரச்சாரம் நடத்துவார் என்றும் எடப்பாடி தனக்கு ஒரு பொருட்டாக கருதியது இல்லை என்றும் புகழேந்தி தெரிவித்துள்ளார்.