Homeசெய்திகள்அரசியல்கலங்கடிக்கும் சீன ராணுவ வீரர்களின் வீடியோ... மவுனம் கலையுங்கள் மோடி..! கொதிக்கும் ராகுல் காந்தி..!

கலங்கடிக்கும் சீன ராணுவ வீரர்களின் வீடியோ… மவுனம் கலையுங்கள் மோடி..! கொதிக்கும் ராகுல் காந்தி..!

-

- Advertisement -
kadalkanni

புத்தாண்டையொட்டி கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இருந்து சீன ராணுவ வீரர்களின் வீடியோ வெளியானதையடுத்து, பிரதமர் மோடியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக தாக்கியுள்ளார்.

கிழக்கு லடாக்கின் கல்வான் பகுதியில் சீன ஊடுருவல் குறித்து பிரதமர் நரேந்திர மோடி மௌனம் கலைக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேட்டுக் கொண்டார். கிழக்கு லடாக், அருணாச்சல பிரதேசத்தில் சீனா ஊடுருவியதாகக் கூறப்படும் நிலையில் மத்திய அரசு தோல்வியுள்ளதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது.

பிஜேபியின் தேர்தல் வியூகம் - தகர்த்தெரியும் மக்கள்!

ராகுல் காந்தி தனது ட்விட்டர் பதிவில், ‘எங்கள் மூவர்ணக் கொடி கால்வானில் நன்றாக பறக்கிறது. சீனா பதில் சொல்ல வேண்டும். மோடி ஜி, உங்கள் மௌனத்தை கலையுங்கள்’’ எனத் தெரிவித்துள்ளார். அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள 15 இடங்களின் பெயர்களை மாற்றிய சீனாவின் நடவடிக்கை குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பாஜக அரசு பதில் சொல்ல வேண்டும் என அவர் வலியுறுத்தி உள்ளார்.

ஜனவரி 1ஆம் தேதி, சீன அரசு ஊடகமான குளோபல் டைம்ஸ், இந்திய எல்லைக்கு அருகில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் சீனக் குடிமக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்ததாக சீன ராணுவ வீரர்கள் கூறும் வீடியோவை ட்வீட் செய்தது. அந்த வீடியோவில், சீன வீரர்கள் நிற்கும் மலையின் பின்புறத்தில், ‘ஒரு அங்குல நிலத்தை ஒருபோதும் கொடுக்க வேண்டாம்’ என சீன மொழியில் எழுதப்பட்ட பலகை உள்ளது.

சீனா தனது வீரர்களின் மற்றொரு வீடியோவையும் வெளியிட்டுள்ளது. அதில், கல்வான் பள்ளத்தாக்கில் சீனக் கொடி ஏற்றப்பட்டுள்ளது. இந்த இரண்டு வீடியோக்களுக்கும் இந்தியா அதிகாரப்பூர்வமாக பதிலளிக்கவில்லை. இந்த வீடியோ வெளியானதில் இருந்து, கால்வன் ட்விட்டரில் வேகமாக டிரெண்டாகி வருகிறது. இந்த வீடியோவை சீனாவின் புதிய பிரசாரம் என பலரும் வர்ணித்துள்ளனர்.

https://x.com/shen_shiwei/status/1477244792069242881

கல்வான் பள்ளத்தாக்கு வன்முறைக்குப் பிறகு முதன்முறையாக, கிழக்கு லடாக்கின் காரகோரம் பாஸ், டிபிஓ, சுஷுல், டெம்சோக், ஹாட் ஸ்பிரிங், பாட்டில்நெக் மற்றும் கொங்ராலா பகுதிகளில் இந்தியா வீரர்களும், சீனாவின் ராணுவ வீரர்களும் புத்தாண்டு வாழ்த்துக்களையும், இனிப்புகளையும் பரிமாறிக்கொண்டனர். இரு நாட்டு ராணுவத்தின் களத் தளபதிகளும் மொத்தம் ஏழு இடங்களில் சந்தித்து, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நீடித்து வந்த பதற்றத்துக்கு முடிவு கட்டி புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

MUST READ