மக்களிடம் இருந்து ஜிஎஸ்டி அமைப்பு வரி என்ற பெயரில் திருடி வருவதாக கடுமையாக விமர்சித்துள்ளார் .நாட்டின் மக்கள்தொகை கட்டமைப்பின் ஏற்றத்தாழ்வுகளை மறு சீரமைக்க வேண்டும் என ஜார்க்கண்ட் தேர்தல் பரப்புரையில் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்!
ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு வரும் 13ம் தேதி நடைபெறவுள்ள நிலையில் இறுதி கட்ட பிரச்சாரத்தில் அரசியல் கட்சியின் தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி இன்று ஜார்கண்ட் மாநிலம் பாக்மாரா இன்னும் இடத்தில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது நாட்டில் அமல்படுத்தப்பட்டுள்ள ஜிஎஸ்டி என்பது ஏழை மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்படும் அமைப்பு எனவும், நாட்டில் உள்ள மொத்த ஏழை மக்களில் 8% பழங்குடியினர் , 15% தலித் மக்கள் , 15% சிறுபான்மையினர் மற்றும் 50% பிற்படுத்தப்பட்டவர்கள் எனவும், குறிப்பிட்ட மக்களிடம் இருந்து ஜிஎஸ்டி அமைப்பு வரி என்ற பெயரில் திருடி வருவதாக கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும், அரசு வேலை வாய்ப்புகளில் பழங்குடியினர், சிறுபான்மையினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் பிரதிநிதித்துவம் மிகவும் குறைவாக உள்ளதாக கவலை தெரிவித்துள்ள ராகுல் காந்தி, நாட்டின் சமூக கட்டமைப்பை துல்லியமாக பிரதிபலிக்கும் வகையில் மறு சீரமைப்பை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
மாநிலத்தில் பாதுகாப்பான சூழலை உருவாக்க பாஜகவை அகற்ற வேண்டும் – சஞ்சய் ராவாத்