Homeசெய்திகள்அரசியல்ராகுல்காந்தி அணிந்த புளு கலர் டீ ஷர்ட் - நாடு முழுவதும் அம்பெத்கர் விவாதம்

ராகுல்காந்தி அணிந்த புளு கலர் டீ ஷர்ட் – நாடு முழுவதும் அம்பெத்கர் விவாதம்

-

தான் வழக்கமாக அணியும் உடையின் நிறத்தை மாற்றி அணிந்துள்ள ராகுல் காந்தி! – அம்பேத்கர் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அத்மிதா சர்ச்சைக்குரிய வகையில் பேசியதை கண்டிக்கும் வகையில் நீல நிற உடை அணிந்து நாடாளுமன்றத்தில் போராட்டத்தில் ஈடுபட்டார் ராகுல் காந்தி.

ராகுல்காந்தி அணிந்த புளு கலர் டீ ஷர்ட் - நாடு முழுவதும் அம்பெத்கர் விவாதம்

நாடாளுமன்ற மாநிலங்களவையில் இரண்டு நாட்களுக்கு முன்பு நடைபெற்ற அரசியல் சாசனம் தொடர்பான விவாதத்தின் போது பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ‘அம்பேத்கர் அம்பேத்கர் அம்பேத்கர்’ என சொல்வது இப்போது ஃபேஷனாகிவிட்டது எனவும், இத்தனை முறை கடவுளின் பெயரை உச்சரித்து இருந்தால் சொர்க்கத்தில் இடம் கிடைத்திருக்க கூடும் என பேசினார்.

ராகுல்காந்தி அணிந்த புளு கலர் டீ ஷர்ட் - நாடு முழுவதும் அம்பெத்கர் விவாதம்

இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து கடந்த இரண்டு நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக நாடாளுமன்றத்திற்கு வெளியே நடைபெறும் போராட்டத்திலும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் “ஜெய்பீம்” என்ற முழக்கத்தை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ராகுல்காந்தி அணிந்த புளு கலர் டீ ஷர்ட் - நாடு முழுவதும் அம்பெத்கர் விவாதம் கடந்த சில ஆண்டுகளாகவே வெள்ளை நிற டி-ஷர்ட் மட்டுமே அணியும் ராகுல் காந்தி இன்று தனது உடையில் நிறத்தை மாற்றி நீல நிற உடை அணிந்து நாடாளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளார். இன்று காலையில் நடந்த காங்கிரஸ் எம்.பிக்கள் கூட்டத்திலும் அதே நீல நிற “T” shirt அணிந்து கலந்து கொண்ட ராகுல் காந்தி நாடாளுமன்ற வளாகத்திற்குள் நடந்த போராட்டத்தின் போது மட்டுமல்லாமல் அவை நடவடிக்கையில் நீல நிற “T” Shirt அணிந்திருந்தார்.

தவெகவுக்கு டெபாசிட் கிடைக்காது… சர்வே முடிவால் அதிர்ச்சியில் விஜய்!

MUST READ