Homeசெய்திகள்அரசியல்முடிவில் எந்த மாற்றமும் இல்லை.. முகுந்தனுக்கு தான் பதவி.. - ராமதாஸ் திட்டவட்டம்..

முடிவில் எந்த மாற்றமும் இல்லை.. முகுந்தனுக்கு தான் பதவி.. – ராமதாஸ் திட்டவட்டம்..

-

- Advertisement -
kadalkanni
“முகுந்தன் தான் பாமக இளைஞரணித் தலைவர் என பொதுக்குழுவிலேயே அறிவித்துவிட்டேன். அவர் நியமனத்தில் எந்த மாற்றமும் இல்லை” என பாமக நிறுவனர் ராமதாஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் கடந்த டிசம்பர் 28ம் தேதி அக்கட்சியின் சிறப்பு புத்தாண்டு பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டம் பாட்டனூரில் நடைபெற்ற அந்தக் கூட்டத்தில், முகுந்தன் பரசுராமனை பாமக இளைஞரணி தலைவராக ராமதாஸ் அறிவித்தார். இதற்கு பொதுக்கூட்ட மேடையிலேயே அன்புமணி எதிர்ப்பு தெரிவித்தார். அவர், “முகுந்தன் கட்சியில் சேர்ந்தே 4 மாதங்கள் தான் ஆகின்றன. அதற்குள் இளைஞரணி தலைவர் பதவியா? அனுபவன் வாய்ந்தவர்களுக்கு பதவி கொடுங்கள்” என கூறியிருந்தார்.

அவர் பேசிக்கொண்டிருக்கும்போதே குறுக்கிட்ட ராமதாஸ், “யாராக இருந்தாலும் நான் சொல்வதைத்தான் கேட்க வேண்டும். நான் சொல்வதைக் கேட்கவில்லை என்றால் யாரும் இந்தக் கட்சியில் இருக்க முடியாது” என்று தெரிவித்தார். இதனையடுத்து பொதுக்கூட்டத்தில் இருந்து அன்புமணி ஆவேசமாக வெளியேறினார். இதனையடுத்து பலரும் பாமகவில் பிளவு என விமர்சிக்கத் தொடங்கினர். அதற்கு வலு சேர்க்கும் வகையில் ராமதாஸின் எக்ஸ் தள பதிவும் அமைந்தது. இந்த உட்கட்சி பூசல் விவகாரம் சமூக ஊடகங்களிலும் பெரியளவில் எதிரொலித்தது.

இந்த நிலையில் இன்று விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் உள்ள தனது இல்லத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “பொதுக்குழுக் கூட்டத்தில் பேசப்படும் விஷயங்கள், உட்கட்சி விவகாரம். பொதுக்குழுக் கூட்டத்தில் ஊடகவியலாளர்களை எந்தக் கட்சியினரும் அனுமதிக்கமாட்டார்கள். அந்த கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணியும், நானும் பேசியது உட்கட்சி விவகாரம். அதன்பிறகு அன்புமணி இங்கு வந்தார். அவருடன் பேசினேன், எல்லாம் சரியாகிவிட்டது.

பொதுக்குழுக் கூட்டத்தில், பாமக இளைஞர் சங்கத் தலைவராக முகுந்தன் பரசுராமனை அறிவித்துவிட்டோம். அவருக்கு நியமனக் கடிதமும் கொடுத்துவிட்டோம். அவர் அந்தப் பதவியில் நீடிக்கிறாரா என்ற பேச்சுக்கே இடமில்லை. பொதுக்குழுவில் அறிவித்தபடி,அடுத்தநாளே அவருக்கு நியமனம் கடிதம் கொடுத்துவிட்டேன். பொதுக்குழுவில் நடந்த விவகாரம் பாமகவின் வளர்ச்சியை பாதிக்காது.
முடிவில் எந்த மாற்றமும் இல்லை.. முகுந்தனுக்கு தான் பதவி.. - ராமதாஸ் திட்டவட்டம்..

பாமக, ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் கட்சி சார்பில் நடக்கும், பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டங்களின்போது, என்னை விமர்சியுங்கள், என்னுடைய தவறுகளை விமர்சியுங்கள் என்றுதான் கூறுவேன். நேரடியாக என்னை விமர்சிக்க தயங்குபவர்கள், தொலைபேசி வழியாக என்னிடம் பேசுங்கள் அல்லது கடிதம் எழுதுமாறு கேட்டுக் கொள்வேன். இப்போதும் அதைத்தான் கூட்டங்களில் சொல்கிறேன். காரணம் நான் தவறு செய்வதை சுட்டிக்காட்டினால்தான் நான் திருத்திக் கொள்வேன். நான் சொல்வதெல்லாம் சரிதான் என்று கேட்டுச் சென்றால், என் தவறும் தெரியாது நான் திருத்திக்கொள்ளவும் முடியாது.

பத்திரிகையாளர் சந்திப்புகளில் கூட எந்த கேள்வி கேட்டாலும் எனக்கு கோபம் வருவதில்லை. ஒரு கட்சியின் தலைவர் உள்ளிட்ட எந்த பதவியில் இருப்பவர்களுக்கும் பத்திரிகையாளர்கள் எந்த கேள்வி கேட்டாலும் கோபம் வரக்கூடாது. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியிடம் செய்தியாளர்கள் ஒருமுறை , கூட்டணியில் இருந்து கொண்டே ராமதாஸ் தொடர்ந்து விமர்சித்து வருகிறாரே என கேள்வியெழுப்பினர். அதற்கு தைலாபுரத்தில் எனக்கு தைலம் வருகிறது என்று நளினமாக, நாகரிகமாக கூறுவார்” என்று ராமதாஸ் தெரிவிதிருக்கிறார்.

 

MUST READ