பாமக இளைஞர் அணி தலைவர் நியமனம் குறித்த விவகாரத்தில் ராமதாஸ் – அன்புமணி ஆகியோருக்கு இடையே பொதுக்குழுவில் மோதல் ஏற்பட்ட நிலையில், நேற்று இருவரும் தைலாபுரம் இல்லத்தில் சந்தித்து பேசிக்கொண்டனர்.
“எங்கள் கட்சி ஒரு ஜனநாயக கட்சி. அப்படிப்பட்ட ஒரு கட்சியின் பொதுக்குழுவில் காரசாரமான விவாதங்கள் நடப்பது இயல்புதான்.
உட்கட்சி பிரச்னைகள் பற்றி மற்றவர்கள் எதுவும் பேசத் தேவையில்லை. அவற்றை நாங்களே பேசிக்கொள்வோம். எங்களுக்கு ஐயா, ஐயாதான்…’’ எனத் தெரிவித்து இருந்தார்.
அப்பா -மகன் மோதல் குறித்து எக்ஸ் தளத்தில் கருத்துத் தெரிவித்துள்ள அரசியல் விமர்சகர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், ‘‘அன்புமணி-ராமதாஸ் போன்ற குடும்ப அரசியல் சண்டைகள் அவ்வப்போதைய பரபரப்புகளே. பெரும் மாற்றத்தை நிகழ்த்தாது. ஒரு அதிகாலையில் கலைஞர் தம் மகன் மு.க.அழகிரி தம்மை மிரட்டுவதாக பொதுவெளியில் கூறினார். (அழகிரிக்கு மத்திய அமைச்சர் பதவியும் வாங்கி தந்திருந்தார்)
அதே அழகிரியை, முரசொலி மாறன் குடும்பம் சன் டிவியில் அவமானப்படுத்தியதாக கலைஞர் கோபப்பட்டார். மதுரை தினகரன் அலுவலகம் எரிந்தது. பஞ்சாயத்து நடந்தது. கண்கள் பனித்தன.இதயம் இனித்தது என இணைந்தார்.
வாரிசு அரசியல் கூடாது என மதிமுகவை 30 ஆண்டுகளுக்கு முன் நாங்கள் துவக்கினோம். அதன முடிவு இன்று வேடிக்கையாக இருக்கிறது. எங்கள் உழைப்பு வீண் வினைகளை் ஆகிவிட்டது தமிழக அரசியலில் இவை சகஜம்..
தந்தை என்கிற ஒரே ஒரு காரணத்தால் மட்டுமே அரசியல், அதிகாரம், பதவி, பணம் என சகலத்தையும் பெற்ற வாரிசுகள், பொதுச்சொத்தான அரசியல் கட்சியை தங்கள் குடும்பத்தின் தனிச்சொத்தாக கருதுவதாலும் அந்த குடும்ப சொத்துக்கு தாம் மட்டுமே அரசியல் கட்சிகளில் வாரிசுகள் என்கிற ஆணவமும் சேர்ந்து இவர்களை ஆட்டுவித்தது… ஆட்டுவிக்கிறது. அரசியல் ஜனநாயகம் இல்லாத நிலை ஆக்கி விட்டனர். நாஞ்சில் மனோகரன் சொன்ன ‘கருவின் குற்றம்’.
’https://x.com/KSRadhakrish/status/1873399980675002406
இவைகளெல்லாம் ஓரங்க நாடகத்தை நினைவூட்டும்… ஆனால் இதை நம்பி முட்டு கொடுக்கும் தொண்டர்கள் நிலை பரிதாபத்துக்குள்ளாகும். ஆடும்வரை ஆட்டம்… ஆயிரத்தில் நாட்டம்..’’எனத் தெரிவித்துள்ளார்.