Homeசெய்திகள்அரசியல்மத்திய அரசு மீது கைவைத்த யாரும் நிம்மதியாக வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை- ஆர்.பி. உதயகுமார்

மத்திய அரசு மீது கைவைத்த யாரும் நிம்மதியாக வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை- ஆர்.பி. உதயகுமார்

-

மத்திய அரசு மீது கைவைத்த யாரும் நிம்மதியாக வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை- ஆர்.பி. உதயகுமார்

மத்திய அரசு மீது கை வைத்தவர்கள் யாரும், நிம்மதியாக வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை என ஆர்.பி. உதயகுமார் கருத்து தெரிவித்துள்ளார்.

Image

மதுரையில் ஆகஸ்ட் 20-ம் தேதி நடைபெறவுள்ள அதிமுக மாநாட்டிற்கு அனுமதிக்கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி. உதயகுமார், செல்லூர் ராஜூ, அமைப்புச் செயலாளர் ராஜன் செல்லப்பா உள்ளிட்டோர் மனு அளித்தனர். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.பி. உதயகுமார், “வருமான வரி சோதனைக்கு சென்றவர்கள் தாக்கப்பட்டது, கை, கால்கள் உடைக்கப்பட்டது போன்ற கொடுமை இப்போது தான் இங்கு நடந்துள்ளது. மத்திய அரசு மீது கைவைத்த யாரும் நிம்மதியாக வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை. முதல்வர் ஸ்டாலின் ஜப்பான் நாட்டிற்கு தனி விமானத்தில் இன்பச் சுற்றுலா சென்றுள்ளார். ஆனால் எங்களுடைய பொதுச்செயலாளர் ஈ.பி.எஸ் பொது விமானத்தில், மக்களில் ஒருவராக வெளிநாடுகளுக்கு பயணித்தார்” என்றார்.

Image

இதனை தொடர்ந்து பேசிய செல்லூர் ராஜூ, “விமான நிலையத்திற்கு அருகேயுள்ள இடத்தில் அதிமுகவின் மதுரை மாநாடு நடைபெறும். லோக்சபா தேர்தலுக்கான தொடக்க புள்ளியாக இம்மாநாடு அமையும். பொதுச்செயலாளராக ஈபிஎஸ் பொறுப்பேற்ற பின் நடக்கும் முதல் மாநாடு. இதில் 60 லட்சம் பேர் பங்கேற்பார்கள்” என்றார்.

MUST READ